அமைச்சர் சர்ச்சை பேச்சு!அடங்கமாட்டோம்! நாங்க பெரிய ரௌடி! திமுக கட்சியே இருக்காது!

Photo of author

By Parthipan K

அமைச்சர் சர்ச்சை பேச்சு! அடங்கமாட்டோம்! நாங்க பெரிய ரௌடி! திமுக கட்சியே இருக்காது!

நீங்க இப்போதான் ரௌடி! நாங்க அப்போவே ரௌடி தான்! என அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வேலூர் தேர்தல் பொது கூட்டத்தில் சர்ச்சையாக பேசியுள்ளார்.

நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதி மட்டும் நிறுத்திவைக்கபட்டது. திமுக கட்சியினர் பணபட்டுவாட செய்ய பணம் பதுக்கி வைத்திருந்ததாக பணம் பிடிக்கப்பட்டு தேர்தல் ஆணையம் தேர்தலை நிறுத்தியது. பின்பு ஆகஸ்டு மாதம் 5 ஆம் தேதி மறு தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் அதிமுக மற்றும் திமுக கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக தரப்பில் வேல்முருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் கூட்டணி கட்சி ஏ.சி. சண்முகம் போட்டியிடுகிறார். இது தவிர மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி என 28 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

அதிமுக, திமுக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இரு கட்சிகளும் மாறிமாறி குறைகூறுகின்றனர். இதை தொடர்ந்து, நேற்று அதிமுக தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது,

எம்.ஜி. ஆர் அதிமுக தலைமையில் மூன்று முறை முதலமைச்சராக பதவி வகித்தார். அப்பொழுது அதிமுகவில் 17 லட்சம் தொண்டர்கள் இருந்தனர். பின்பு அம்மா ஜெயலலிதா அவர்களின் தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டு 17 லட்சம் தொண்டர்களை, 1.50 கோடி லட்சம் தொண்டர்களாக உருவாக்கினார்.

அம்மாவின் ஆதரவில் மக்களின் குறைகளை தேடி தேடி நிவர்த்தி செய்து வருகிறோம். திமுக வெறும் பொய்யான வாக்குறுதிகளை கூறி வெற்றி பெறுகிறது. திமுக எங்களை குறைகூறுவதை வேடிக்கை தனமாக உள்ளது.

மேலும் படிக்க : சச்சின் காங்கிரஸ் கட்சியின் தலைவரா? இன்று காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு!

திமுக கட்சி இப்போதுதான் ரௌடி , ஆனால் நாங்கள் பிறப்பில் இருந்தே ரௌடிகள். அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி கண்ணசைத்தால் திமுக கட்சியே இருக்காது என்று சர்ச்சைக்குரிய பேச்சை பேசியுள்ளார்.

மேலும் படிக்க : அரசியலில் அப்பட்டமாக இரட்டை வேடமா? திமுகவின் சந்தர்ப்பவாத அரசியலை அம்பலப்படுத்தும் ராமதாஸ்

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்