விஜய் சேதுபதியை கண்டித்த நாம் தமிழர் கட்சி பிரமுகர்!! வாட்டி வதைக்கும் ரசிகர்கள்!!
தமிழில் முன்னணி நடிகராக விளங்குபவர் விஜய்சேதுபதி. இவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த திரைப்பட நடிகர் ஆவார். மேலும் இவர் தயாரிப்பாளர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவர் தென்மேற்கு பருவகாற்று, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், நானும் ரவுடிதான் சேதுபதி, திரைப்படம் போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக தமிழில் முன்னணி நடிகையாக உள்ளார். மேலும் இவரை இவரின் ரசிகர்கள் மக்கள் செல்வன் என்று அன்புடன் அழைத்து வருகின்றனர். இவர் இரண்டு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் மற்றும் 3 விஜய் விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார்.
மேலும் இவர் 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இப்படியே தொடர்ந்து பிசியாக இருக்கும் விஜய் சேதுபதிக்கு தற்பொழுது ஒரு வெப்சீரிஸ் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்று தகவல்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தது. அதைத் தொடர்ந்து தற்போது அந்த வெப் சீரிஸ் குறித்து ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. அது என்னவென்றால் இயக்குனர்கள் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் சமீபத்தில் தி ஃபேமிலி மேன் 2 என்ற வெப் சீரிஸ் உருவாகியிருந்தது. மேலும் இந்த வெப் சீரிஸில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கும் சமந்தா நடித்திருந்தார். இந்த சீரிஸின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இதை தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதியும் இயக்குனர்கள் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் தான் வெப் சீரிஸில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியானது. இதை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் இடும்பாவனம் கார்த்திக் விஜய் சேதுபதியை கண்டித்துள்ளார்.
https://twitter.com/rajndk/status/1421850879083175936?s=20
நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் இடும்பாவனம் கூறியதாவது தி ஃபேமிலி மேன் 2 தொடர் மூலம் புலியை கொச்சைப்படுத்தி உலகமெங்கும் வாழும் தமிழர்களை காயப்படுத்திய அயோக்கியன் களோடு கொஞ்சிக் குலாவ உங்களால் எப்படி முடிகிறது? மேலும் வெட்கமின்றி மக்கள் செல்வன் என தப்பாட்டம் அடிக்க உங்களால் எப்படி முடிகிறது? கொஞ்சமேனும் நன்றியுடன் இருங்கள் விஜய்சேதுபதி என்று கூறியுள்ளார். இதனால் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். மேலும் நாம் தமிழர் கட்சி பிரமுகர் இடும்பவனம் கார்த்திக்கை எதிர்த்து விஜய் சேதுபதியின் நடிகர்கள் கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.