விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது நாங்கள் தான்: இஸ்ரோ சிவன் பரபரப்பு பேட்டி

Photo of author

By CineDesk

விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது நாங்கள் தான்: இஸ்ரோ சிவன் பரபரப்பு பேட்டி

நிலவின் தென்துருவத்தில் விழுந்த விக்ரம் லேண்டர் கண்டுபிடித்ததாக நேற்று நாசா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது. அதுமட்டுமின்றி இதனை கண்டுபிடிக்க ஒரு தமிழர்தான் உதவிகரமாக இருந்தார் என்றும் அவர் சென்னையை சேர்ந்த சண்முகம் சுப்பிரமணியம் என்றும் நாசா நிறுவனம் தெரிவித்திருந்தது
இதனை அடுத்து சண்முகம் சுப்பிரமணியனுக்கு பாராட்டுக்கள் குவிந்தது. திமுக தலைவர் முக ஸ்டாலின் , அமமுக பொதுச்செயலாளர் தினகரன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து வந்தனர்

இந்த நிலையில் நிலவில் விழுந்து நொறுங்கிய விக்ரம் லேண்டரை இஸ்ரோவின் ஆர்பிட்டர் முன்பே கண்டுபிடித்து விட்டது என்றும், லேண்டரை கண்டுபிடித்த தகவலை இஸ்ரோ இணையதளத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னரே வெளியிட்டு விட்டோம் என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் அவர்கள் இன்று காலை பேட்டி அளித்துள்ளார்

விக்ரம் லேண்டர் நாங்கள்தான் கண்டுபிடித்தோம் என்று நாசா தெரிவித்த நிலையில் தற்போது இஸ்ரோ தலைவர் இவ்வாறு தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இஸ்ரோ தலைவர் கூறியது உண்மைதான் என்றும் விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது என இஸ்ரோ ஏற்கனவே அறிவித்துள்ளது என்றும் ஆனால் ஏற்கனவே இஸ்ரோ அறிவித்துள்ளது என்றும் ஆனால் நாசா திடீரென நேற்று தாங்கள்தான் விக்ரம் விழுந்த இடத்தை கண்டு பிடித்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்து வருகின்றனர்

நாசா மற்றும் இஸ்ரோ இடையே நடைபெறும் இந்த கருத்து மோதல் எங்கு முடியுமோ என்று விஞ்ஞானிகள் கவலை தெரிவித்து வருகின்றனர்