சுதந்திர இந்தியாவில் எங்களுக்கு இதற்கு கூட உரிமை இல்லை! குற்றம் சாட்டிய நீதிபதி!
கடந்த மாதம் கடைசியில் 29 ஆம் தேதி ஜார்க்கண்ட் மாநிலத்தில் நீதிபதி ஒருவர் அதிகாலை நேரத்தில் நடைப்பயிற்சி செய்யும்போது, ஆட்டோ ஏற்றி கொலை செய்யப்பட்டார். இது உலக அளவில் பலரை கவலையுறச் செய்தது. உலகம் எங்கே செல்கிறது? என்று கேட்க செய்தது. இந்த கொலை வழக்கை நீதிமன்றமே முன்வந்து வழக்கை விசாரிக்க சொன்னது.
அதில் இரு கைதிகளுக்கு அவர் சட்டத்திற்கு புறம்பாக நான் எதுவும் செய்யமாட்டேன் என்று கூறியதன் காரணமாக அவரை கொலை செய்துள்ளார்கள். இது தொடர்பான விசாரணை நடைபெற்றாலும், இந்த வழக்கின் மூலம் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக உள்ள ரமணா அவர்கள், இந்தியாவில் புகார் அளிக்க கூட நீதிபதிகளுக்கு சுதந்திரம் இல்லை என வேதனை தெரிவித்துள்ளார். மேலும் நீதிபதிகள் புகார் அளித்தால் காவல் துறையோ அல்லது சிபிஐ அமைப்போ உரிய நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் அவர் நீதிபதிகள் புகார் அளிக்கும் பட்சத்தில் சிபிஐ உளவுத்துறை அமைப்புகள் நீதித்துறையின் விசாரணைக்கு உதவ மறுப்பதாகவும், அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். மேலும் புலனாய்வு அமைப்புகள் நீதித்துறைக்கு உறுதுணையாக இல்லை என்ற கருத்தையும் முன் வைத்துள்ளார். இதை மத்திய, மாநில அரசுகள் ஏற்குமா? நீதிபதியாக இருக்கும் இவர்களுக்கே இந்த நிலைமை என்றால், நினைத்துப் பாருங்கள். ஒரு சாமானிய மக்களின் நிலையை.
ஒரு வழக்கு அவருக்கு சாதகமாக முடிய எதனை முறை, எவ்வளவு தள்ளுபடி பெறுகிறது. அதுவும் பாதிக்கப்பட்டவனுக்கு வசதி இல்லை எனில் எவ்வளவோ துன்பங்கள், எல்லா வகையிலும் அவன் பாதிக்கப்படுகிறான். இது தற்போது நீதிபதி கூறிய கருத்தினால் நிரூபனமாகியுள்ளது.தமிழகத்திலும், இந்தியாவிலும் சட்டம் மற்றும் நீதி சரி இல்லை என்பது தத்ரூபமாக தெரிகிறது.