மீண்டும் மிரட்டும் கொரோனா!! நாட்டின் பொருளாதாரம் குழிக்குள் தள்ளப்படுமா??
கோரோனா தொற்றானது உலகம் முழுவதும் பரவி உலகப் பொருளாதாரத்தையே குறைத்து பெறும் வீழ்ச்சியை ஏற்படுத்தியது. இதில் சில நாடுகள் மீண்டு வந்திருந்தாலும் இன்னும் பல நாடுகளில் இந்த வீழ்ச்சி இதுவரையில் ஏற்றம் காணவில்லை. இதற்கு இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல. கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்திலிருந்து இந்திய நாட்டின் பொருளாதாரம் இன்னும் மீண்ட பாடில்லை. இந்நிலையில் கொரோனா தொற்றின் மூன்றாம் அலை அச்சம் பெரிதும் பரவி வருகிறது. ஒருவேளை குருநாதரின் மூன்றாம் அலை பரவினால் மீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்படும். மூன்றாம் அலையினால் இந்தியப் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர் அபிஜித் பானர்ஜி கூறியுள்ளார்.
கொரோனா தொற்றின் மூன்றாம் அலையின் காரணமாக இந்தியா நாட்டின் ஜிடிபி 7 விழுக்காடுக்கு கீழே போகும் அபாயம் உள்ளதாக பேனர்ஜி கூறியுள்ளார். தற்போது உலகப் பொருளாதார பட்டியலில் இந்திய நாட்டின் ஜிடிபி 9.5 விழுக்காட்டை எட்ட வாய்ப்புள்ளதாக சர்வதேச நிதியம் தெரிவித்திருந்தது. ஆனால், இந்த கொரோனா தொற்றின் மூன்றாம் அலையால் 7 விழுக்காடுக்கு கீழே செல்ல வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர் அபிஜித் பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் சர்வதேச ஆலோசனை வாரியத்தின் தலைவராக பொருளாதார வல்லுநர் அபிஜித் பானர்ஜி பொறுப்பு வகித்து வருகிறார். தற்போது கொரோனாவால் உருவாகும் பொருளாதார பிரச்சினைகள் குறித்தும், பொருளாதாரத்தை பலப்படுத்துவது குறித்தும் மேற்கு வங்க அரசுக்கு அபிஜித் பானர்ஜி ஆலோசனை வழங்கி வருகிறார். இந்நிலையில், மூன்றாம் அலை பாதிப்பால் இந்தியாவின் ஜிடிபி 7 விழுக்காடு வரை சரிய வாய்ப்புள்ளது எனவும், மற்றொரு அலை வந்தால் ஜிடிபி அதையும் தாண்டி கீழே போய்விடும் எனவும் அபிஜித் பானர்ஜி அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.