தமிழ் எழுத்தாளர்களில் மிக முக்கியமான எழுத்தாளர் சாரு நிவேதிதா. இவருக்கென மிகப் பெரிய ரசிகர் படை உள்ளது. அப்படிப்பட்ட இவர் சினிமாவில் நடிக்க கூடிய கலைஞர்களுக்கு கிடைக்கும் மரியாதையில் ஒரு சதவீதம் மரியாதையில் கொஞ்சம் கூட எழுத்தாளர்களுக்கு கிடைப்பதில்லை என தெரிவித்திருக்கிறார்.
அடுத்த மனிதரின் சுதந்திரத்தில் குறுக்கிடாமலும் அதே சமயம் நம்முடைய தனிப்பட்ட சுதந்திரத்தை இழக்காமலும் வாழ்வதே சிறப்பான வாழ்க்கை என்ற கருத்தை முன்வைப்பவை சாரு நிவேதிதாவின் படைப்புகள். இறுக்கம் மிகுந்த நவீன வாழ்வில் சக மனிதன் மீதும், பிராணிகள் மீதும், இயற்கை மீதும் அன்பை போதிப்பவை இவருடைய எழுத்துக்களாகும்.
இவருடைய நாவலான ஸீரோ டிகிரி, சுவிட்சர்லாந்தின் யான் மிஸால்ஸ்கி இலக்கிய விருதுக்கு 2013 ஆம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இவருக்கு, தி இந்து தனது தீபாவளி மலரில், தமிழகத்தின் மனதில் பதிந்த முகங்களில் ஒருவராக 2014 ஆம் ஆண்டு தேர்ந்தெடுத்து பெருமைப்படுத்தியது என்பது அனைவரும் அறிந்ததே.
இவர் நாவல்கள் மட்டும் இல்லாமல் கட்டுரைத் தொகுப்புகள், நாடகம், சிறுகதை தொகுப்பு, சினிமா விமர்சனம், அரசியல் கட்டுரை போன்றவற்றை எழுதுவதில் வல்லவராக திகழ்ந்தவர்.
இப்படிப்பட்ட இவர் சமீபத்திய பேட்டி ஒன்று தெரிவித்திருப்பதாவது :-
எழுத்தாளர்களின் கடின உழைப்புக்கு மரியாதை கிடைக்க வில்லை என நினைத்த அவர், சினிமா கலைஞர்களுக்கு கிடைக்கக்கூடிய மரியாதையில் பத்தில் ஒரு சதவிகிதம் எழுத்தாளர்களுக்கு கிடைத்தது என்றால் அனைத்தும் சாத்தியப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும், அக்காலத்தில் எல்லாம் எழுத்திற்காக உயிரை கொடுக்க கூடிய அளவிற்கு எழுத்தாளர்கள் இருந்தனர் என்றும் இப்பொழுது உள்ள எழுத்தாளர்கள் அவ்வாறு இருப்பது முட்டாள்தனம் என உணர்ந்து விட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.