ADMK BJP: தமிழகத்தில் நடைபெற போகும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள பலமான கூட்டணி கட்சியை அமைக்க வேண்டும் என்ற காரணத்திற்காக அதிமுக மீண்டும் பாஜகவுடன் இணைந்தது. இவர்கள் கடந்த மக்களவைத் தேர்தலில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதால் கூட்டணியை முறித்துக் கொண்டனர். தற்போது திமுகவை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே கூட்டணியில் இணைந்துள்ளனர்.
ஆனால் இம்முறை கூட்டணி வைத்ததிலிருந்து கட்சிக்குள் பல்வேறு குளறுபடிகள் இருந்து வருகிறது. அதாவது கொள்கை ரீதியாக நாங்கள் வேறு, திமுகவை எதிர்ப்பதற்காக மட்டும்தான் இந்த கூட்டணி என்று எடப்பாடி கூறி வருகிறார். ஆனால் பாஜக இலையின் மீதுதான் தாமரை மலரும் கட்டாயம் கூட்டணி ஆட்சி என தெரிவித்துள்ளது. இது ரீதியாக பொது நிகழ்ச்சியில் அமித்ஷாவே இதை உறுதி செய்துள்ளார்.
மேற்கொண்டு அண்ணாமலையும் நான் கட்சிக்கு எதிராக எதையும் பேச முடியாது இவ்வளவு அழுத்தமாக கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா சொல்கையில் அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை என தெரிவித்தார். இப்படி பாஜக அதிமுகவின் தலையீடு இல்லாமலேயே பல்வேறு முடிவுகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் இவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக எடப்பாடி கூறியுள்ளதாவது, ஆட்சியில் பங்கு தருவோம் என்று பாஜக எதிர்பார்த்து இருப்பதற்கு நாங்கள் ஒன்றும் ஏமாளி கிடையாது.
அதேபோல கூட்டணி வேண்டும் என்றால் வேண்டும் வேண்டாம் என்றால் வேண்டாம், அதைப்பற்றி எல்லாம் எங்களுக்கு கவலை இல்லை என நேரடியாகவே தெரிவித்துவிட்டார். இதனால் கூட்டணி ஆட்சி என்று நீங்கள் கூறிக்கொண்டு அடுத்த கட்ட நகர்வை எடுக்க நினைத்தால் உங்களுடன் கூட்டணி வேண்டாம் என்பதை எடப்பாடி நாசுக்காக சொல்லி முடித்துள்ளார். இதனால் வரும் நாட்களில் பாஜகவின் கைகள் ஓங்க வாய்ப்பில்லை.