ஏ ஆர் ரகுமான் மனைவிக்கு நாங்க டார்ச்சர் கொடுத்தோம்!! வெளிப்படையாக கூறிய ஜீவியின் அம்மா!!

Photo of author

By Gayathri

1995 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் மற்றும் சாய்ரா தம்பதியினருக்கு திருமணம் நடைபெற்றது. அன்றிலிருந்து மகிழ்வுடன் வாழ்ந்த தங்களது 29 வருட கால வாழ்க்கையை இப்பொழுது முடித்துள்ளனர்.

இவர்களுடைய விவாகரத்து இசை ரசிகர்களுடைய மிகப்பெரிய வருத்தத்தை உருவாக்குவதாகவே உள்ளது. இவர்களின் விவாகரத்திற்கு உணர்ச்சியின் அழுத்தமே காரணம் என இவர்களது வக்கீல் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு இவர்களுடைய விவாகரத்து குறித்து விமர்சனங்களும் சர்ச்சைகளும் வந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது ஜிவி பிரகாஷினுடைய அம்மா ரைஹானா அவர்கள் விவாகரத்து குறித்து சில கருத்துக்களை வெளிப்படையாக கூறியுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது :-

ஏஆர் ரகுமான் மனைவி சாய்ரா ரொம்ப போல்டான லேடி, எங்க வீட்டுல அவளுக்கு நிறைய டார்ச்சர் கொடுத்தோம். ஆனா அதையெல்லாம் அவர் கண்டு கொள்ள மாட்டார். எவ்வளவு கடினமான சூழ்நிலையையும் எளிதில் கடந்து வரக்கூடியவர் சாய்ரா என்று ஜீவியினுடைய அம்மா கூறியிருக்கிறார்.

மேலும், சாய்ரா அவர்கள் உடை, பாவனை எல்லாமே அற்புதமாக இருக்கும். நகையை விரும்பாத சாய்ரா, ஏஆர் ரகுமானுடைய சிகை அலங்காரத்தை கூட அவரே கவனித்துக் கொள்வார். சாய்ரா மிகவும் எளிமையானவர். ஆனால், தன்னுடைய உடையில் மட்டும் மிகுந்த கவனம் செலுத்தக் கூடியவராக அவர் எப்பொழுதும் இருப்பார் என்றும் ஜி.வி பிரகாஷ் என்னுடைய தாயார் தெரிவித்திருக்கிறார்.