இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டும்! இல்லையென்றால் ஜீவசமாதி அடைவேன்! சாமியாரின் புதுவித மிரட்டல்!

Photo of author

By Rupa

இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டும்! இல்லையென்றால் ஜீவசமாதி அடைவேன்! சாமியாரின் புதுவித மிரட்டல்!

இளம் இந்திய நாடானது பல வண்ணங்களில் அமைந்துள்ளது. அதாவது இந்து முஸ்லிம் கிறிஸ்டின் போன்ற அனைவரும் ஒன்று சேர்ந்து வண்ணமாக காட்சியளிக்கின்றது. அவற்றில் ஒரு சிலர் தங்களது மதம் என்று கூறிக்கொண்டு அனைவரையும் தனித்து பாவித்து வருகின்றனர். அந்த வகையில் அயோத்தியில் ஜகத்குரு நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அதில் அவர் கூறியதாவது, இந்தியாவை இந்து ராஷ்டிரா என்று மாற்ற வேண்டும்.

குறிப்பாக காந்தியின் பிறந்தநாள் அன்று இப்பெயரை அறிவிக்கவேண்டும் என்றார். அவ்வாறு மாற்றவில்லை  என்றால் நான் சரயு நதியில் ஜலசமாதி அடைவேன் என்று கூறினார்.அதேபோல இந்தியாவில் வாழும் இந்துக்களை தவிர்த்து மீதமுள்ள முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும் என்பதையும் நரேந்திர மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.இவரைப் போலவே பலர் இந்தியாவில் இந்து ராஷ்டிரம் என்று மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருவது வழக்கம்தான்.

ஆனால் இவர் புதுவித முறையில் அவ்வாறு பெயர் மாற்ற விட்டால்,  ஜல்சமோவி அடைந்தேன் என்று கூறுவது மிரட்டுவது போல் உள்ளது. இவர்களைப் போலவே பல அரசியல் வாதிகளும் நேரு இல்லை என்றால் இந்தியா இந்நேரம் இந்து ராஷ்டிரம் என்ற பெயரில் தான் இருந்திருக்கும் என்று கூறி அவ்வப்போது சர்ச்சையை ஏற்படுத்துகின்றனர்.அதுமட்டுமின்றி வரும் 2022 யில் உத்திரப்பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.இந்த சூழலில் சாமியார் இவ்வாறு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா ,அனைத்து மக்களுக்கு பொதுவானது.சாதி பிரச்சனைகளை தாண்டி தற்பொழுது மதம் சார்ந்த பிரசானைகள் நடக்க ஆரம்பமாக உள்ளது.இவர்களின் பின்னணியில் உள்ளவர்கள் சிலர் இவ்வாறு கூறுபவர்களுக்கு ஆதரவாக உள்ளனர்.இவ்வாறு கூறுவதால்  மக்களிடையே பிரிவினை ஏற்பட்டு விடுகிறது.இதனை மக்கள் கண்டுகொள்ளாமல் அனைவரும் ஒன்றுபட்டு இருக்க வேண்டும்.இது ஜனநாயக நாடு என்பதால் அனைவருக்கும் பொதுவானதே என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.