திராவிட மாடல் ஆட்சிமுறை வேண்டும்! முதல்வர் ஸ்டாலின் தி.மு.க. நிர்வாகி திருமண விழாவில் உரை!!

Photo of author

By Vijay

திராவிட மாடல் ஆட்சிமுறை வேண்டும்! முதல்வர் ஸ்டாலின் தி.மு.க. நிர்வாகி திருமண விழாவில் உரை!!

Vijay

We want Dravidian model governance! Chief Minister Stalin DMK Speech at the wedding ceremony of the administrator!!

திராவிட மாடல் ஆட்சிமுறை வேண்டும்! முதல்வர் ஸ்டாலின் தி.மு.க. நிர்வாகி திருமண விழாவில் உரை!!

தமிழ்நாட்டைப் போல புதுச்சேரியிலும் தி.மு.க முறை ஆட்சி தேவைப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். புதுச்சேரி தி.மு.க அவைத்தலைவர் எஸ்.பி. சிவக்குமாரின் இல்லத் திருமண விழாவில் கலந்துக் கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய  கூறி இருப்பதாவது:

புதுச்சேரி மீது எனக்கு தனிப்பாசம் உண்டு. கலைஞரின் கொள்கை வரம் பெற்ற ஊர் தான் புதுச்சேரி. புதுச்சேரிக்கும், திராவிட இயக்கத்துக்கும் நேரடி நெருங்கிய தொடர்பு உண்டு. தமிழ் நாட்டையும் புதுச்சேரியையும் யாரும் தனித்து பிரித்து பார்க்க முடியாது.

புதுச்சேரி திராவிட இலக்கியத்தின் தலைநகராகும்.ஆளுநர் ஆட்டிப் படைக்கும் வகையில் புதுச்சேரியில் ஆட்சி நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது.தமிழ் நாட்டைப்போல் புதுச்சேரிக்கும் திராவிட மாடல் முறை ஆட்சித் தேவைப்படுகிறது.புதுச்சேரியில் மீண்டும் தி.மு.க ஆட்சி நிச்சயம்  உதயமாகும்.தேர்தல் தொடங்கும் நேரத்தில் அதற்க்கான கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும் என்று அவர் கூறினார்.

புதுச்சேரியில் பொம்மை ஆட்சி நடைபெறுகிறது. அங்கு மதவாத ஆட்சி அமைந்திடக்கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். தற்போது  இங்கு மக்களுக்கான ஆட்சி நடைபெறவில்லை. புச்சேரி மக்களுக்கு அரசால் எந்த நன்மைகளும் கிடைக்கவில்லை.புதுச்சேரியிலும் திராவிட கழகத்தின் ஆட்சி கட்டாயம் அமையும்,என்றும் அவர் கூறியுள்ளார்.