ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சிறப்பு குழு கூட்டம்! உக்ரைன் ரஷ்யா சமரசப் பேச்சுவார்த்தை அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம்- இந்தியா!

0
185

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையே கடந்த 4 நாட்களாக கடுமையான போர் நடைபெற்று வருகிறது.

மிகப் பெரிய படை பலம் கொண்ட ரஷ்ய ராணுவத்தின் உக்ரைன் ராணுவம் வெறும் 11 லட்சம் ராணுவ வீரர்களை கொண்டு சமாளித்து வருகிறது.

இந்த நிலையில், உலக நாடுகள் அனைத்தும் ரஷ்யாவிற்கு கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறது. உக்ரைன் சார்பாக இந்தியா இந்த விவகாரத்தில் தலையிட்டு ரஷ்யாவை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள செய்ய வேண்டும் என்று வலியுறுத்த வேண்டுமென கேட்டுக் கொண்டதற்கிணங்க பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சிறப்பு கூட்டம் ஆரம்பமானது. இதில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலிலிருந்து ரஷ்யாவை நீக்குமாறு உக்ரைன் கோரிக்கை விடுத்திருக்கிறது. இந்த சூழ்நிலையில், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உரையாற்றிய அமெரிக்க பிரதிநிதி தெரிவித்ததாவது.

ரஷ்யாவின் பாதுகாப்பற்ற செயல்களின் காரணமாக, அவர்களுடைய செயல்கள் மற்றும் விதிமீறல்களுக்கு நிச்சயமாக பொறுப்பேற்க வேண்டும் என்று ஒரு தீர்மானத்தை முன் வைக்கிறோம். நாங்கள் உரையாற்றும்போது உக்ரைன் முழுவதும் ராக்கெட்டுகள் தொடர்ந்து குண்டு மழை பொழிந்து வருகிறது.

பொய்களால் இணைக்கப்பட்ட நியாயப்படுத்த தாக்குதலுக்காக உக்ரைன் தொடர்பாக அரசியல் பிரச்சாரம் செய்து வருகிறது என்று தெரிவித்தார்.

இந்நிலையில், இந்தியாவின் தரப்பில் இந்தியாவிற்க்கண நிரந்தர பிரதிநிதியான திருமூர்த்தி தெரிவித்ததாவது, உக்ரைனில் நடைபெற்று வரும் வன்முறையை உடனடியாக நிறுத்துவதற்கும், அனைத்து வகைகளுக்கும் முடிவு கட்டுவதற்கும், எங்களுடைய அழைப்பை மீண்டும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

ரஷ்ய கூட்டமைப்பு மற்றும் தலைமையுடன் அதனுடைய தலைமையுடனான அண்மைக்கால உரையாடல்களில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இதனை வலுவாக ஆதரித்திருக்கிறார் என்று தெரிவித்தார்.

உக்ரைனில் நடைபெற்று வரும் வன்முறையை உடனடியாக நிறுத்தவும் பேச்சுவார்த்தைக்கு விரும்பும் அமைதி முயற்சிகளுக்கு எந்த நேரத்திலும் பங்களிப்பை வழங்குவதற்கு இந்தியா தயாராகவுள்ளது என்றும், அவர் தெரிவித்திருக்கிறார். பல அரசியல் பேச்சுவார்த்தை நடத்த இரு தரப்பினரும் வெளியிட்டிருக்கும் இன்றைய அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

உக்ரைன் நாட்டில் இன்னும் அங்கே சிக்கித்தவிக்கும் அநேக இந்திய மாணவர்கள் உட்பட இந்தியர்கள் அனைவரையும் விரைவாகவும், பாதுகாப்பாகவும், வெளியேற்ற நாங்கள் தொடர்ந்து மிகுந்த அக்கறை செலுத்தி வருகிறோம் என்று தெரிவித்தார்.

முன்னதாக உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலை கண்டிக்கும் தீர்மானம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் தோல்வியடைந்தது. இந்த ஓட்டெடுப்பை இந்தியா புறக்கணித்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் சிறப்பு கூட்டத்தில் உக்ரைன், ரஷ்யா போர் விவகாரம் தொடர்பாக முக்கிய முடிவுகளை மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Previous articleதிருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள்! மாதம் 25000 சம்பாதிக்க ரெடியா?
Next articleஎன்னுடைய பிறந்தநாளில் இதை செய்யுங்கள்! தொண்டர்களுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் அன்பு கட்டளையிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!