நாம்தான் நண்டை உணவாக உண்போம்! ஆனால் அது எந்த உணவை சாப்பிடுகிறது பாருங்கள்!
அன்றாடம் நம் வாழ்வில் சில விலங்குகள், பறவைகள் போன்றவற்றுடன் நாம் பழகி இருப்போம். வளர்ப்பு பிராணிகள் ஆக கூட வீட்டில் வைத்து இருப்போம். தற்போது ஏற்பட்ட வளர்ச்சியின் காலநிலையினால், நாம் மலை மேல் உள்ள கொவிலுக்குக்கெல்லாம் செல்லும் போது சில குரங்குகள் நம் கையில் இருக்கும் பதப்படுத்திய உணவு பொட்டலங்களை பிடுங்கி சென்று விடும்.
அந்த அளவு நாம் ஒன்றோடு ஒன்றாக பழக்கி விட்டுள்ளோடோம். காகம் கூட சாப்படை தவிர நொறுக்கு தீனி வகைகள், பிஸ்கட்டுகள் மற்றும் சிற்றுண்டி வகைகளை தான் சாப்பிடுகிறது என்பது பலருக்கு கண் கூடாக பார்த்திருப்பீர்கள். அந்த வகையில் தற்போது ஒரு புது ஜீவனையும் மனிதர்கள் உருவாக்கி விட்டுள்ளனர்.
குரங்குகள், பறவைகள் போன்றவை தான் மனிதர்கள் கொடுக்கும் உணவை கையிலிருந்து வாங்கி உண்பதை நாம் வழக்கமாக பார்த்திருகிறோம். ஆனால் தண்ணீருக்குள் இருக்கும் இதை நாம் தான் பொதுவாக சாப்பிடுவோம். ஆனால் அதிசயிக்க வகையில் நண்டுகள் கூட நம்மிடம் வந்து வாங்கி உண்ணுவது பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
வேலூரில் பாதியளவு தண்ணீருக்கு வெளியே தனது கொடுக்குகளை நீட்டி மனிதர்கள் கொடுக்கும் உணவை அதாவது பிஸ்கட்டை வாங்கி உண்பது போன்ற ஒரு புகைப்படக் காட்சி அரிதிலும் அரிதாக கிடைத்துள்ளது. இந்த புகைப்படம் வேலூர் அருகே காட்பாடி டெல் வெடி மருந்து நிறுவனம் அருகே உள்ள ஒரு சிறு ஓடையில் கிடைத்த அரிய காட்சி தான் இது என்று சொல்கிறார்கள். ஒருவேளை இதைத்தான் கலி முத்தி போச்சு என்று சொல்கிறார்களோ? என்னவோ? அப்படியும் இருக்கலாம்.