வேட்பாளர் விவகாரத்தில் முன்வைத்த காலை நாங்கள் பின் வைக்க மாட்டோம் – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

0
171
ADMK D. Jayakumar
ADMK D. Jayakumar

வேட்பாளர் விவகாரத்தில் முன்வைத்த காலை நாங்கள் பின் வைக்க மாட்டோம் – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

வேட்பாளர் விவகாரத்தில் முன்வைத்த காலை நாங்கள் பின் வைக்க மாட்டோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறல்கள் தொடர்பாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை சந்தித்து புகார் மனு கொடுத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஈரோடு கிழக்கு தொகுதியில் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வாக்காளர்கள் இல்லாமல் வாக்குகள் மட்டும் உள்ளதாக தெரிவித்தார்.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் தான் பாஜக உள்ளதாகவும், பேனர் விவகாரம் தெரியாமல் ஏற்பட்ட எழுத்துபிழை என்று ஜெயக்குமார் கூறினார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் வேட்பாளர் அறிவித்த தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, நாங்கள் தான் அதிமுக என்றும் அவர் ஒரு மண்குதிரை என்று கூறினார்.

கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைத்தால் மீனவர்களும், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும் என்று தெரிவித்த ஜெயக்குமார், பேனா நினைவுச் சின்னத்தை அண்ணா அறிவாலயத்தில் அமைத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்

பாஜக வேட்பாளர் அறிவித்தால் ஓபிஎஸ் தங்களது வேட்பாளர்களை திரும்ப பெற்று கொள்வதாக தெரிவிக்கும் நிலையில் தங்களது வேட்பாளர்களை திரும்பி பெறுவீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார், நாங்கள் முன்வைத்த காலை பின் வைக்க மாட்டோம் என்று ஜெயக்குமார் கூறினார்.

Previous articleபூவுலகின் நண்பர்கள் சொன்ன கருத்து நல்லெண்ணம் கொண்டது தான் – திராவிடர் கழகத்தின் தலைவர் கி வீரமணி
Next articleதனியார் நிறுவன ஊழியர் வீட்டில் இருந்து 25 கிலோ வெள்ளிப்பொருட்கள் திருட்டு