எங்கள் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு எல்லையை மீறி சென்றால் அவ்வளவுதான்! கொந்தளிக்கும் பாஜக!

Photo of author

By Sakthi

பாஜக தமிழகத்தில் மெல்ல, மெல்ல வளர்ந்து வருகிறது. முன்பொரு காலத்தில் பாஜக என்று சொன்னால் தமிழகத்தில் அப்படி ஒரு கட்சி இருக்கிறதா? என்று பலரும் கேட்பார்கள். ஆனால் தற்போது அப்படியல்ல தற்போது உள்ள சூழ்நிலையில் இளமை அப்படியே தலைகீழாக மாறியுள்ளது.

தமிழகத்தில் தற்போது அதிமுக தான் பிரதான எதிர்க்கட்சி ஆனால் எதிர்க்கட்சியைக்கான எந்த ஒரு வேலையையும் அந்த கட்சியை செய்யவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஆனால் அதற்கு காரணம் இருக்கிறது அந்த கட்சி உட்கட்சி பிரச்சனைகளில் கவனம் செலுத்தி வருவதால் மாநில அரசியலில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.

ஆனால் இதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் பாஜக ஆலம் தரப்பு செய்யும் அனைத்து விதமான தவறுகளையும் சுட்டிக்காட்டி ஆலங்குறிச்சிக்கு மிகப்பெரிய சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறது.

தமிழகத்தில் பாஜக ஒருபுறம் வளர்ந்து வந்தால் மறுபுறமும் அதன் ஊற்று அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பு மறுபுறம் வளர்ந்து வருகிறது.

பாஜக வளர்ந்தாலும் கூட பரவாயில்லை ஆர் எஸ் எஸ் மற்றும் தமிழகத்திற்குள் நுழைவிடக்கூடாது என்பதில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மிக உறுதியாக இருந்து வருகின்றன. அப்படி ஆர் எஸ் எஸ் அமைப்பு தமிழகத்திற்குள் வளர்ந்து விட்டால் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் வைத்திருக்கும் கொள்கை நீர்த்துப் போகும் சூழ்நிலை ஏற்படும். அதன் பிறகு ஆண்டாண்டு காலத்திற்கும் திமுக ஆட்சி அரியனை பற்றி நினைத்து கூட பார்க்க முடியாது.

ஆகவே தான் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மீது திமுகவிற்கும் அதன் கூட்டணி கட்சிக்கும் அவ்வளவு வெறுப்பு என்கிறார்கள் ஆர்எஸ்எஸ் அபிமானிகள்.

இந்த நிலையில் அரசியல் நாடகம் ஆடி தன்னுடைய சுயலாபத்திற்காக எந்த மதத்தை இழிவு படுத்தினாலும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் அதை தடுத்து நாங்கள் பிறந்த மதத்தை இழிவுபடுத்திக் கொண்டே இருப்பதை நாங்கள் வேடிக்கை பார்க்க மாட்டோம் என்று பாஜகவின் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்ட பாஜகவை சார்ந்தவர்கள் சார்பாக இள கணேசன் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று மதுரை வேலம்மாள் மருத்துவமனை அருகே உள்ள ஆதி மகாமுனி சிவாலயத்தில் சிறப்பு ஆயுள் ஹோமம் நடத்தப்பட்டது. பாஜகவின் மதுரை ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த மகா சுசீந்திரன் பாஜகவின் மூத்த தலைவரும் மேகாலயா மாநில ஆளுநருமான இல. கணேசன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விரைவில் அவர் உடல் நலம் பெற்று வருவதற்கு ஆதி சிவன் கோவிலில் மதுரை மாவட்ட பாஜக சார்பாக ஹோமம் வளர்க்கப்பட்டு 1500 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தொடர்ந்து அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அவர் பூரண குணமடைந்து தொடர்ந்து இந்த தேசத்திற்கு வழிகாட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

திருமாவளவன், சீமான், திருமுருகன் காந்தி,ஆ.ராசா உள்ளிட்டோர் கைலாச நாடு தொடங்கிய நித்தியானந்தாவை போல அவர்களும் ஒரு நாட்டை தொடங்கி இந்த கருத்துக்களை சொன்னால் நல்லது. சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்ற நிலையை இவர்கள் காண வேண்டாம் என்று எச்சரிக்கிறேன். சத்ரபதி சிவாஜி, சின்னமருது, பெரியமருது வாரிசுகள் நாங்கள்.

தன்னுடைய சுயலாபத்துக்காக சுய விளம்பரத்திற்காக இந்து மக்களையும், இந்து தேசத்தையும் பிரிக்க நினைக்கின்ற சக்திகளுக்கு யார் பாடம் புகட்டுவார்களோ தெரியாது. மதுரையிலிருந்து நாங்கள் பாடம் புகட்டுவோம். நான் ஒரு இந்தியன், இந்து என்ற அடிப்படையில் பாடம் புகட்டும் காலம் மதுரையில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

அரசியல் நாடகம் ஆடி தன்னுடைய சுய லாபத்திற்காக எந்த மதத்தை இழிவு செய்தாலும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் அதை தவிர்த்து நாங்கள் பிறந்த மதத்தை இழிவுபடுத்திக் கொண்டே இருப்பதை எங்களால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நாங்கள் பொறுமையாக இருப்பதற்கு காரணம் தேசத்தை ஆளும் புனிதமான இயக்கத்தைச் சார்ந்த காரிய கருத்தர்கள் என்ற அடிப்படையில் தான் நாங்கள் பொறுமையாக இருக்கிறோம்.

அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு துறந்து நான் இந்தியன் இந்து என்ற நிலைக்கு எப்போது வருகிறோமோ அன்று அவர்களுடைய நாக்கு அவர்களின் உடலில் இருக்காது

வெட்டி விடுவோம். இதற்காக பல வழக்குகள் வந்தாலும் பரவாயில்லை. இந்து மக்களையும் இந்து தேசத்தையும் பிரிக்கும் எந்த ஒரு தீய சக்தியின் நாக்கை வெட்டுவதற்கு நாங்கள் அஞ்ச மாட்டோம் அதற்காக சிறை செல்லவும் தயாராக இருக்கிறோம் என்று மகா சுசீந்திரன் சர்ச்சையை ஏற்படுத்தும் விதத்தில் பேசியுள்ளார்.