நாங்கள் எப்படி வேண்டுமானாலும் பேசுவோம்.. நீங்கள் பேச கூடாது! ஸ்டாலினை அவதூறாக பேசிய பாஜக பிரமுகர் கைது! 

0
176
We will talk anyway.. You must not talk! BJP leader arrested for defaming Stalin!
We will talk anyway.. You must not talk! BJP leader arrested for defaming Stalin!

நாங்கள் எப்படி வேண்டுமானாலும் பேசுவோம்.. நீங்கள் பேச கூடாது! ஸ்டாலினை அவதூறாக பேசிய பாஜக பிரமுகர் கைது!

சென்னை திருநின்றவூர் பகுதியை சேர்ந்தவர் தான் பூபதி. பூபதி பாஜக கட்சியின் பிரமுகராக உள்ளார். இவர் சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவிட்டார். அந்த வீடியோ தற்பொழுது வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில்  முதலமைச்சர் மற்றும் பட்டியலின மக்களை குறித்து அவதூறாக பேசியுள்ளார். தற்சமயத்தில் திமுக நடத்தும் ஆட்சி மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து பலர் இணையத்தில் அவதூறாக பேசிவரும் நிலையில் இவர் நேரடியாகவே கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து இவர் மீது ஒன்பது பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு போட்டு போலீசார் இவரை கைது செய்துள்ளனர்.இனி முதல்வர் பற்றியோ அல்லது அவர் நத்தும் ஆட்சியை பற்றியோ அவதூறாக பேசினால் அவர்களுக்கு லாக்கப் தான் என பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.முதல்வர் பற்றி அவதூறாக பேசியதற்கு ஆக்ஷன் எடுக்க தெரிந்தவர்களுக்கு,அவரது அமைச்சர்களே வெட்டவெளியில் அனைவரின் முன்னிலையில் மக்கள் மற்றும் பெண்களை அவதூறாக பேசி வருகின்றனர்.

முதல்வர் நாக்கை அடக்கி பேச வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில் அவர் கட்சியில் இருப்பவர்கள் பேசுவதை நிறுத்தவில்லை.அவர்கள் மீது தற்பொழுது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை.பெண்களையோ அல்லது மக்களையோ அனைவர் முன்னிலையில் அவதூறாக பேசினால் குற்றமில்லை,மக்கள் உங்களை பேசினால் குற்றம் என்பது போல தற்பொழுது ஆட்சி உள்ளது.மேலும் இதனை பலரும் கண்டித்தும் வருகின்றனர்.

Previous articleமக்களே ஜாக்கிரதை மீண்டும் பறவை காய்ச்சல்! ஆட்சியர் போட்ட அதிரடி உத்தரவு!
Next articleஅடுத்தடுத்து அத்துமீறும் சிங்களப்படை! இதற்கு முடிவே இல்லையா? இலங்கையை கடுமையாக எச்சரிக்க மத்திய அரசிடம் பாமக நிறுவர் வலியுறுத்தல்!