அடிமையாக தொழில் செய்ய விரும்பவில்லையா? இதை மட்டும் அணிந்தால் அதிகார நிலைக்கு மாறலாம்!

Photo of author

By Kowsalya

ஒரு சிலருக்கு அடிமையாக தொழில் செய்வது பிடிப்பதில்லை. சூழ்நிலைகள் மட்டுமே அவரை மற்றவர்களிடம் வேலை செய்யும்படி செய்துவிடுகிறது. எவ்வளவு முயற்சித்தாலும் பண பிரச்சனைகள், சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஆகியவை அவரை மற்றவர்களுக்கு அடிமையாக வேலை செய்யும்படி செய்து வருகிறது. வேலை செய்பவர்களுக்கு அனைவருக்கும் தான் முதலாளியாக வேண்டும் என்ற எண்ணம் எப்பொழுதும் மேலோங்கி நிற்கும். ஆனால் அதற்கேற்ற வழிதான் என்னவென்று அவர்களுக்கு தெரியாது. இந்த பதிவில் உங்கள் ராசிக்கு எந்த கல் அணிந்தால் உங்களது அடிமைத்தனம் நீங்கி அதிகாரம் செய்யும் நிலைக்கு உயர்வீர்கள் என்று பார்க்கலாம்.

ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு ராசிக்கல் இருக்கும். அதனை நீங்கள் உடலில் அணிந்து கொள்ளும் பொழுது உங்களது நிலைமை மாறும். அது நீங்கள் கையில் அணியும் மோதிரமாக இருக்கலாம் அல்லது கழுத்தில் அணிய கூடிய டாலராக கூட இருக்கலாம். அது என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

1. இது மேஷம் மற்றும் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு இது. மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் அவர்களது நட்சத்திரத்தின் அடிப்படையில் மிருகசீரிஷம், அவிட்டம், சித்திரை ஆகிய நட்சத்திரம் உடையவர்கள் உங்களது பெயரின் கூட்டு எண்ணிக்கை 9 என்று வந்தால் நீங்கள் பவள மோதிரம் அணியலாம். இப்படி நீங்கள் பவள மோதிரம் அணியும் பொழுது உங்களது அடிமைத்தனம் நீங்கி உயர்வான பதவிக்கு செல்வீர்கள். உயர்பதவியில் அல்லது அதிகாரத்தில் இருப்பவர்களின் நட்புகள் உங்களுக்கு கிடைக்கும். சொத்தில் இருந்துவந்த பிரச்சினைகள் அகலும். இந்த மோதிரம் அணிவதால் வாழ்க்கையில் மட்டும் மாற்றம் ஏற்படாமல் உங்கள் உடல் நிலை மாற்றங்களும் ஏற்படும். உங்களது உடலில் உள்ள நோய்களையும் அகற்றும். எனவே மேஷம் மற்றும் விருச்சிகம் ராசிக்காரர்கள் பவளம் மோதிரம் அணியலாம்.

2. மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் அவர்களுடைய நட்சத்திரத்தின் அடிப்படையில் பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரத்தின் பெயரில் உங்களது பெயரின் எண்ணிக்கை 8 என்று வந்தால் நீங்கள் நீலக்கல் என்னும் ரத்தினத்தை அணியலாம். அப்படி நீங்கள் நீலக்கல் ரத்தினத்தை உங்களது உடலில் அணியும் பொழுது பகைவர்கள் உங்களைவிட்டு விலகிச்செல்வார்கள். சட்ட ரீதியான பிரச்சினைகள் இருந்தால் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு அமையும்.

3. திருவாதிரை, சதயம், சுவாதி ஆகிய நட்சத்திரத்தைப் உடையவர்கள் உங்கள் பெயரின் கூட்டு எண்ணிக்கை 4 என்று வந்தால் நீங்கள் கோமேதகம் கல் அணிய உங்களுக்கு பண வரவு கொட்டும்.அதிக லாபம் கிட்டும். நீங்கள் பங்குசந்தையில் முதலீடு செய்திருந்தால் உங்களுக்கு அனைத்தும் லாபமாக அமையும்.

எனவே உங்கள் ராசிக்கு நட்சத்திரங்கள் அடிப்படையில் உங்கள் பெயரின் கூட்டு எண்ணிக்கையைக் கொண்டு இராசிக்கல் அமைத்துக் கொள்ளுங்கள். உங்களது தொழிலும் வாழ்க்கையும் சரி உயர்ந்த நிலைக்கு செல்லும்.