Chennai: தீபாவளி நெருங்க உள்ள நிலையில் இன்று சென்னையில் சில இடங்களில் மழை பெய்தது. அதனை தொடர்ந்து நாளை அக்டோபர்31 அன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகையை அன்று மழை வராமல் இருந்தால் அது மிகப்பெரிய அதிசயம். ஏனென்றால் ஒவ்வொரு வருடமும் தீபாவளி அன்று கண்டிப்பாக மழை பெய்யும் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த நிலையில் சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் நாளை இரண்டு வளிமண்டல மேலடுக்கு சுழற்சிகள் நிகழ்கிறது.
அதனால் கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்றும், நாளை அதாவது தீபாவளி அன்று அக்டோபர் 31 மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவித்துள்ளது.
ஆனால் சென்னை மற்றும் அதை சார்ந்த புறநகர் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் தீபாவளி அன்று மழை பெய்து பட்டாசு வெடிக்க முடியாமல் போய்விட்டது என சிறுவர்கள் கவலைப்படுவார்கள். அதே போல் அவர்களுக்கு இந்த வருடமும் மழை வரும் என அதிர்ச்சி செய்தியை வானிலை மையம் தெரிவித்துள்ளது.