இனி தான் ஆட்டம் ஆரம்பம்! உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! இன்று எங்கெல்லாம் மழை?

0
167

வங்கக் கடலின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி பெறுவதால் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டு இன்றிலிருந்து 11ம் தேதிக்குள் தமிழ்நாடு மற்றும் புதுவைக்கிடையே கரையை நோக்கி நகர்வதற்கான வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அதிக கன மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது.

இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

அதேபோல நாளைய தினம் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அனேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

நாளை மறுநாள் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் பல இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் அதோடு புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராமநாதபுரம், கரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழையும் பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

வரும் 12ஆம் தேதியை பொருத்தவரையில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஓரிரு பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழையும், பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையின் பல்வேறு நகரங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸில் இருந்து, 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் மற்றும் 25 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Previous articleமாணவர்களே உஷார்! பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றினால் இதுதான் தண்டனை!
Next articleமாணவிகளே இனி பயம் வேண்டாம்! மகளிர் கல்லூரிகளுக்கு முன்பு போலீஸ் கண்காணிப்பு தீவிரம்!