தமிழ்நாட்டில் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும். மேலும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி மற்றும் திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள், கன்னியாகுமரி, ஈரோடு, திருநெல்வேலி, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மேலும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இதனையடுத்து நாளை கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்கள் மாவட்டங்களில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். 17ம் தேதி அன்று நீலகிரி மற்றும் கோயம்புத்தூரில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் மற்ற இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் வருகிற 17-ஆம் தேதி வரை கடலோர பகுதிகள் மற்றும் அரபி கடல் பகுதிகளில் பலத்த காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். மீனவர்கள் கடல் மற்றும் அரபி கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.