தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

Photo of author

By Janani

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

Janani

தமிழகத்தில்

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5ந்தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடையக்கூடும். பிறகு மேலும், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 8ந்தேதி வடதமிழகம், புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் அருகில் நிலவக்கூடும். கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக

03-12-2022: தென் தமிழகம், வடதமிழக கடலோர மாவட்டங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.மேலும், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை , தூத்துகுடி, இராமநாதபுரம், சிவகங்கை , புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.

04.12.2022 : தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

05.12.2022: தென் தமிழகம், வடதமிழகம்,புதுவையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

06.12.2022 : தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

07.12.2022 :தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.