வெதர்மேனின் லேட்டஸ்ட் ரிப்போர்ட்! வரும் 14ஆம் தேதி வரையில் தமிழகத்தில் பரவலான மழைக்கு வாய்ப்பு!

0
160

இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதியில் ஏற்பட உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்தில் வரும் 14ஆம் தேதி வரையில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இலங்கையில் கடல் பகுதியை ஒட்டி இருக்கக்கூடிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகள் வரும் ஒன்பதாம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்படுகிறது அடுத்த 2 நாட்களில் வடக்கு, வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து தமிழக மற்றும் புதுவையில் கடற்கரை பகுதியை நோக்கி வலுவடைந்து நகரக்கூடும்.

காற்றழுத்த தாழ்வு பகுதி கடலில் வலுவாக தேவையான ஈரப்பதம் காற்றின் அழுத்தம் சாதகமான சூழலில் இருப்பதால் இது நன்றாக அமைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்று சொல்லப்படுகிறது. புயலாக வலுப்பெறுவது தொடர்பாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதனால் வரும் 11ஆம் தேதி வரையில் தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் இடி மின்னனுடன் கூடிய கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது அதேபோல 12ஆம் தேதி ஆரம்பமாகி 14ஆம் தேதி வரையில் தமிழகத்தில் பரவலாக மிதமான மழை மற்றும் ஓரிரு பகுதிகளில் கனமழையும் பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleப்ப்ப்பா என்னா ஸ்பீடு! சென்னைக்கு வந்தது அதிவேக வந்தே பாரத் ரயில்! ரயிலுடன் செல்பி எடுத்து மகிழ்ந்த பொதுமக்கள்!
Next articleமாணவர்களுக்கு பாடம் நடத்த கூடாது! பருவமழையால் பள்ளி கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!