ப்ப்ப்பா என்னா ஸ்பீடு! சென்னைக்கு வந்தது அதிவேக வந்தே பாரத் ரயில்! ரயிலுடன் செல்பி எடுத்து மகிழ்ந்த பொதுமக்கள்!

0
71

இன்று காலை சென்னைக்கு வந்து சேர்ந்த வந்தே பாரத் ரயில் சென்னையிலிருந்து மைசூருக்கு ஒத்திகை பயணத்தை மேற்கொள்ள விற்கிறது.

இந்த வந்தே பாரத் ரயில் ஜப்பான் நாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் செய்த சமயத்தில் அங்கே புல்லட் ரயில் திட்டத்தை பார்த்து அதேபோல இந்தியாவில் ஒரு திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டார் பிரதமர் நரேந்திர மோடி.

அதன் விளைவாகத்தான் பிற்காலத்தில் வந்தே பாரத் ரயில் சேவை இந்தியாவில் கட்டமைக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்திய ரயில் தடத்தில் அதிவேக பயணத்தை மேற்கொள்ளும் வந்தே பாரத் ரயில் தனடைய ஐந்தாவது பயணத்தை சென்னையிலிருந்து மைசூர் வழிதடத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 11ஆம் தேதி இந்த திட்டத்தை ஆரம்பித்து வைக்கிறார். ஏற்கனவே புதுடெல்லி, வாரணாசி, மும்பை, அகமதாபாத் ,குஜராத், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட 4 வழித்தடங்களில் இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில்தான் தன்னுடைய அடுத்த கட்ட பயணமாக ஐந்தாவது வந்தே பாரத் ரயில் சென்னையில் இருந்து மைசூருக்கும், மைசூரில் இருந்து சென்னைக்கும் இயக்க சோதனை ஓட்டங்கள் நிறைவு பெற்றிருக்கிறது. இதன் கடைசி கட்ட ஒத்திகை பயணம் இன்று காலை ஆரம்பமாகியது நின்று கொண்டிருந்த ரயிலுக்கு அருகில் பொதுமக்கள் செல்பி எடுத்துக் கொண்டார்கள்.

சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 5.50 மணி அளவில் பெறப்பட்ட வந்தே பாரத் ரயில் அரக்கோணம் வரையில் 130 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்கிறது.

அதன் பின்னர் காலை 8.50 மணியளவில் ஜோலார் பேட்டைக்கும், 10.25 மணி அளவில் பெங்களூரு ரயில் நிலையத்திற்கும், சென்றடையும். அங்கே 5 நிமிடங்கள் நின்று அதன் பிறகு 10:30 மணி அளவில் புறப்பட்டு 12.30 மணி அளவில் மைசூரை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் பிறகு மறுபடியும் மைசூரிலிருந்து சென்னைக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் மைசூரில் இருந்து 1 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டைக்கு மாலை 4 45 மணிக்கு வந்தடைகிறது. அதன் பிறகு இரவு 7:45 மணிக்கு சென்னை வந்தடைகிறது.

அதாவது அதிகபட்சமாக 130 கிலோ மீட்டர் வேகத்திலும், சராசரியாக 73 கிலோமீட்டர் வேகத்திலும் இயக்கப்படும் இந்த வந்தே பாரத் ரயில், 504 கிலோ மீட்டரை 6 மணி நேரம் 40 நிமிடத்தில் கடக்கிறது.