மூன்று மதத்தினரும் ஒன்று சேர்ந்து நடத்திய வித்தியாசமான திருமணம்!

தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் உள்ள வண்ணாரு கூடத்தை சேர்ந்தவர் அனில்குமார். கிறிஸ்தவரான அனில்குமாரும் அதே மாவட்டத்தில் உள்ள கொல்லகூடத்தில் வசிக்கும் இஸ்லாமிய பெண் ஷேக் சோனியும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இதனையடுத்து அனில்குமாரின் குடும்பம் அவர்களின் காதலுக்கு சம்மதம் தெரிவித்தனர். ஆனால் ஷேக் சோனியின் குடும்பத்தார் அவர்களின் காதலை எதிர்த்து வந்தனர்.

பெண் வீட்டார் ஒப்பு கொள்ளாததால் திருமணம் நடைபெறாமலே இருந்தது. இந்நிலையில் அங்கு வசிக்கும் இந்து மதத்தினர் ஒன்று சேர்ந்து பெண் வீட்டாரிடம் பேசி திருமணத்திற்கு சம்மதம் பெற்றனர்.

மூன்று மதத்தினரும் ஒன்று சேர்ந்து நடத்திய வித்தியாசமான திருமணம்!

இந்நிலையில் இந்து மதத்தினரின் முயற்சி காரணமாகவே நீண்ட காலமாக நடைபெறாமல் இருந்த எங்கள் திருமணம் தற்போது கைகூடியது. எனவே நாங்கள் இந்து முறைப்படி மட்டுமே திருமணம் செய்துகொள்வோம் என்று காதலர்கள் கூறிவிட்டனர்.

அதன்படி நேற்று அவர்களுடைய திருமணம் இந்து மதத்தினரின் முறைப்படி மேளதாளங்கள் கொட்ட, மந்திரங்கள் ஓத, அக்னி சாட்சியாக மாலை மாற்றி, தாலிகட்டி சிறப்பாக நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு மூன்று மதங்களை சேர்ந்தவர்களும் வந்து மணமக்களை வாழ்த்தினர்.

Leave a Comment