தமிழ் சினிமா நடிகர் நடிகைகளை விட பிக்பாஸில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் மக்கள் மத்தியில் பெரிதும் பிரபலம் ஆகின்றனர்.
அந்த வரிசையில் நடிகை ஓவியா படத்தில் நடித்ததை விட பிக் பாஸ்க்கு சென்று வந்த பின் பின் பின் ஒரு ஆர்மியே உருவாகும் அளவுக்கு ரசிகர் கூட்டத்தை திரட்டி உள்ளார்,
பிக்பாஸில் நடிகர் ஆரவ்வும் ஓவியாவும் காதலித்து வந்த நிலையில். அவர்களுக்கு இடையேயான மருத்துவ முத்தம் உலக அளவில் பிரபலமானது அதன்பின் இவர்களுக்கு இடையேயான சண்டை சமாதானம் ஆக மாறி இருவரும் ஒன்றாக இருக்கும் ஒரு போட்டோவை எடுத்து ஷேர் செய்து வந்தனர்.
இதைப்பார்த்த ரசிகர்கள் இவர்களிருவரும் இன்னமும் காதலித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்று முடிவெடுத்து கூடிய சீக்கிரத்தில் திருமணம் செய்து கொள்வார் என்ற முடிவில் இருந்தனர்.
தற்போது நடிகர் ஆரவ் செப்டம்பர் 6-ம் தேதி இமைபோல் காக்க என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ள ராஹீயை திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதைப்பார்த்த ஓவியா ஆர்மி ரசிகர்கள் இவ்வளவு நாள் உங்களையே சுத்தி வந்த ஓவியாவின் நிலைமை என்ன? என்று சமூக வலைதளங்களில் காரசாரமாக பதிவிட்டு வருகின்றனர்.

