அடுத்த வாரம் திருமணம்!! விபத்தில் சிக்கிய ஹீரோ!!

Photo of author

By Parthipan K

அடுத்த வாரம் திருமணம்!! விபத்தில் சிக்கிய ஹீரோ!!

Parthipan K

Updated on:

Wedding next week!! Saravanand in an accident!!

அடுத்த வாரம் திருமணம்!! விபத்தில் சிக்கிய ஹீரோ!!

தெலுங்கு சினிமாவில் முக்கிய ஹீரோவாக இருந்து வருபவர் சர்வானந்த். தமிழில் ‘எங்கேயும் எப்போதும்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு அடுத்த வாரம் திருமணம் செய்ய போவதாக வெளியான தகவல் உண்மை. கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

ஐடி துறையில் பணியாற்றி வரும் ரக்ஷிதாஷெட்டி என்பவரை சர்வானந்த் திருமணம் செய்யப்போகிறார் என்பது தெரியவந்தது. ஜூன் 3ம் தேதி ஜெய்ப்பூரில் இருக்கும் லீலா பேலஸில் நடைபெறும். திருமண ஏற்பாடுகள் பிரமமண்டமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சர்வானந்த் பயணம் மேற்கொண்டு இருந்திருக்கிறார்.

காரின் நிலை தடுமாறி விபத்தில் சிக்கி கொண்டார். அவர் பயணித்த கார் அதிகாலை 3 மணியளவில் பிலிம் நகர் பகுதியில் சாலையின் நடுவே இருக்கும் தடுப்பு சுவற்றில் மோதி விபத்துக்குள்ளாகியது. அங்கிருந்தவர்கள் சர்வானந்த்துக்கு  முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ்சார் விபத்துக்குள்ளான பகுதிக்கு விரைந்து வந்தனர். சர்வானந்த்துக்கு பெரிதாக எந்த காயம் இல்லை. உயிருக்கு ஆபத்தும் இல்லை நலமுடன் இருப்பதாக  தெரிவித்தார்.