புதுச்சேரியின் ஆளுனர் பொறுப்பிலிருந்து நேற்றைய தினம் கிரண்பேடி விடுவிக்கப்பட்டார்.
ஆரம்பத்திலிருந்தே புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி அவர்களுக்கும், கிரண்பேடி அவர்களுக்கும் மோதல் வெடித்து வந்தது இந்த நிலையில், தேர்தல் விரைவில் வரவிருக்கும் சமயத்தில் கிரண்பேடி அந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு இருக்கிறார்.
புதுச்சேரி காங்கிரஸ் சார்பாக கிரண் பேடிக்கு எதிராக அவர் மக்கள் நலத்திட்டங்களை மக்களை சென்று அடையாமல் தடுக்கின்றார் என்று பல்வேறு போராட்டங்கள் நடந்தன.
ஆனாலும் கிரண்பேடியோ நான் செய்கின்ற செயல்கள் அனைத்தும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு என்னுடைய பொறுப்புகளை உணர்ந்து மட்டுமே நான் செயல்படுகிறேன் என்று விளக்கம் அளித்திருந்தார்.
கிரண்பேடி புதுச்சேரி ஆளுநர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை புதுச்சேரியின் துணை ஆளுநராக நியமித்து இருக்கின்றது மத்திய அரசு.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்தவர் தமிழிசை சௌந்தரராஜன், அதோடு பிரச்சாரத்தில் ஈடுபட்டும் புதுச்சேரி மாநிலத்தில் அந்த கட்சியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வந்தவர் தமிழிசை சவுந்தரராஜன். அவரே தற்சமயம் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் ஆக நியமிக்கப்பட்டிருப்பதை பாஜகவினர் வரவேற்று இருக்கிறார்கள்.
நடிகையும் பாஜகவின் பிரமுகருமான குஷ்பூ அக்காவை மீண்டும் வரவேற்கின்றோம் என்று நெகிழ்ச்சியுடன் தன்னுடைய வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.