சசிகலாவை வரவேற்று போஸ்டர் அடித்த நிர்வாகி! அதிரடி நடவடிக்கை எடுத்த இபிஎஸ் ஓபிஎஸ்!

Photo of author

By Sakthi

சசிகலாவுக்கு அவர்களுக்கு வரவேற்பு தெரிவிக்கும் வகையில், சுவரொட்டி அடித்த காரணத்திற்காக, அதிமுகவில் இருந்து மற்றொரு நிர்வாகி அதிமுகவின் தலைமையினால் அதிரடியாக நீக்கப்பட்டி ருக்கிறார்.

சசிகலா அவருக்கான சிகிச்சை முடிந்த பிறகு தமிழகம் திரும்ப இருக்கிறார். அந்த சமயத்தில் அவருக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் மிகச் சிறப்பான வரவேற்பு கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த நிலையில் ,அதிமுகவின் உறுப்பினர்களும் அந்தந்த பகுதிகளில் சசிகலாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சுவரொட்டிகளை ஒட்டி வருகிறார்கள்.

அந்த விதத்தில் திருச்சியில் அதிமுக சார்பாக சசிகலாவை வரவேற்கும் விதமாக, திருச்சி நகரில் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கிய அம்சமாக 33 வருடங்கள் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வாழ்ந்த அதிமுகவின் பொதுச்செயலாளர் தியாக தலைவி சின்னம்மா அவர்களே வருக வருக என்று எழுதப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அந்த நிர்வாகி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.

இதுகுறித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ,மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழகத்தின் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வெளியீட்டு இருக்கின்ற அறிவிப்பில், கட்சியின் கொள்கை மற்றும் கோட்பாடுகளுக்கு எதிரான வகையில் செயல்பட்டு வருவதால் கட்சியின் கண்ணியத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாலும் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தைச் சார்ந்த அண்ணாதுரை அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி மாவட்ட ஊராட்சி குழு முன்னாள் வார்டு உறுப்பினர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட எல்லா பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப் படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நம்முடைய கழகத்தைச் சார்ந்தவர்கள் இவருடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம் என அந்தக் கட்சியின் தலைமை தெரிவித்து இருக்கிறது. ஆகவே ஏற்கனவே திருநெல்வேலி திமுகவைச் சார்ந்த சுப்பிரமணிய ராஜாவை கட்சியில் இருந்து அந்தக் கட்சியின் தலைமை நீக்கி இருந்தது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.