நீங்கள் இந்த மூன்று தேதிகளில் பிறந்தவர்களா? உங்களின் குணாதிசயங்களும் மற்றும் சில வழிபாடுகளும்!
ஒவ்வொருவருக்கும் பிறந்தநாள் ,தினம் ,மாதம் என அனைத்திலும் ஏதேனும் ஒரு சிறப்புகள் மற்றும் அந்த தினத்தில் பிறந்தவர்களுக்கென தனித்துவம் குணாதிசயங்கள் கூறப்படுகின்றது. அந்த வகையில் இன்று எண் 9,18,27 இந்த மூன்று தேதிகளில் பிறந்தவர்களுக்கு என சில ரகசியங்கள் உள்ளது அதனை பற்றி அறிந்து கொள்ளலாம்.9, 18,27 தேதிகளில் பிறந்தவர்களின் ஆதிக்க எண் 9. இந்த தேதிகளில் பிறந்தவர்களின் பொதுவான குணாதிசயம். வாழ்க்கையில் எந்தவிதமான துன்பங்கள் மற்றும் சிக்கல்கள் வந்தாலும் அதனை தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் இவர்களிடம் அதிகம் காணப்படும்.
இவர்கள் எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் அதற்கு உடனடியாக தீர்வை காண வேண்டும் என எண்ணி செயல்படுவார்கள். இவர்கள் வாழ்வில் வெற்றி பெற முக்கிய காரணம் அவர்களின் மன தைரியம் மட்டுமே. மேலும் இவர்கள் தானம் செய்வதில் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். இவர்களுக்கு பயணம் செய்வது என்பது மிக பிடித்த ஒன்றாக இருக்கும். அதிக அளவு ஆன்மீகத்தில் கவனம் செலுத்துவார்கள்.
மேலும் இவர்களுக்கு அதிக அளவு கோபம் ஏற்படும். மேலும் இந்த தேதிகளில் பிறந்தவர்களின் உடன் பிறந்தவர்களால் இவர்களுக்கு எந்த ஒரு பயனும் ஏற்படாது. மேலும் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ஆண்களாக இருந்தால் மனைவியிடமும் பெண்களாக இருந்தால் கணவரிடமும் அதிக அளவு வாக்குவாதத்தில் ஈடுபடுவார்கள். மேலும் இவர்களுடைய பற்கள் மற்றும் இருதயத்திற்கு அடிக்கடி எந்த விதத்திலாவது தொந்தரவு ஏற்பட்டுக் கொண்டிருக்கும்.
மேலும் இவர்களுக்கு ஏற்படும் எதிர்மறையான எண்ணங்களை சுலபமாக தவிர்த்து பயன் பெற ஞாயிற்றுக்கிழமை அன்று வீட்டின் அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு அரளி பூ வாங்கி கொடுக்க வேண்டும். அவ்வாறு அரளி பூ கொடுக்கும் பொழுது செவ்வரளி கொடுப்பது மிக சிறந்தது. இவ்வாறு செய்வதன் மூலம் உங்களுக்கு தேவையற்ற பழி சுமை ஏற்படுவது தடுக்கப்படும்.