இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மேற்குவங்க அரசு அறிவித்த அதிரடி அறிவிப்பு!

இருசக்கர வாகனங்கள் ஓட்டுகின்ற பொதுமக்களுக்கு மேற்குவங்க அரசு திடீரென்று அதிரடி அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. வாகனம் ஓட்டுகின்ற பொதுமக்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று அம்மாநில அரசு வலியுறுத்தி வருகின்றது. 

தற்போது அறிவிக்கப்பட்ட புது அறிவிப்பு என்னவென்றால், அம்மாநிலத்தை சேர்ந்த மக்கள் இருசக்கர வாகனம் ஓட்டும் போது தலைக்கவசம் கட்டாயம் அணிதல் வேண்டும் அவ்வாறு தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுகின்ற வாகன ஓட்டுநர்களின் வாகனத்திற்கு மட்டும் எரிபொருள் வழங்கப்படும் என்ற அதிரடியான அறிவிப்பை அறிவித்துள்ளது. 

அம்மாநிலத்தில் இருக்கும் அனைத்து எரிபொருள் வழங்கும் மையத்திலும் ( Petrol Bunk ) தலைக்கவசம் அணிந்து வரும் ஓட்டுநர்களின் வாகனத்திற்கு மட்டும் எரிபொருள் வழங்குதல் வேண்டும் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது அம்மாநில அரசு. 

தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டி வரும் வாகன ஓட்டுநர்களின் வாகனத்திற்கு எரிபொருள் வழங்க கூடாது என்று எச்சரித்துள்ளது. மேலும் இந்த அதிரடியான புது அறிவிப்பு கொல்கத்தாவில் வருகின்ற 8 ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும் என்பதையும் தெரிவித்துள்ளது.

Leave a Comment