இந்தியா சொதப்பல் ஆட்டம்: 2வது டி20-யில் மே.இ.தீவுகள் அபார வெற்றி!

0
207

இந்தியா சொதப்பல் ஆட்டம்: 2வது டி20-யில் மே.இ.தீவுகள் அபார வெற்றி!

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் நிலையில் சமீபத்தில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் அந்த அணி தோல்வி அடைந்தது. ஆனால் நேற்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில் மே.இ.தீவுகள் அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்றதால் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்ற நிலையில் தற்போது உள்ளன
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் மட்டுமே எடுத்தது. டுபே 54 ரன்களும், ரிஷப் பண்ட் 33 ரன்களும் எடுத்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் குறிப்பிட்டு சொல்லத்தக்க வகையில் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா சொதப்பல் ஆட்டம்: 2வது டி20-யில் மே.இ.தீவுகள் அபார வெற்றி!

இதனை அடுத்து 171 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 18.3 ஓவர்களில் 2 விக்கெட் உங்களை மட்டுமே இழந்து 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரரான சிம்மன்ஸ் கடைசி வரை அவுட் ஆகாமல் 45 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார்.

அதேபோல் நேற்றைய போட்டியில் புதிதாக களமிறங்கிய பூரன் 18 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக சிம்மன்ஸ் தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கும் இடையிலான அடுத்த போட்டி வரும் 11ம் தேதி மும்பையில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleநிறுவனங்கள் அவதிப்பட்டு வரும் முக்கிய விவகாரத்தில் மத்திய அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் ஆலோசனை
Next articleரூ.85 லட்சத்திற்கு ஒரே ஒரு வாழைப்பழம் வாங்கிய அமெரிக்கர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here