கொரோனாவுக்கு பிறகு இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடும் முதல்போட்டி நேற்று தொடங்கியது. இந்த போட்டியின் தொடக்கத்தில் இருநாட்டு கிரிக்கெட் வீரர்களும் கையில் கருப்பு உறை அணிந்து மைதானத்தில் மண்டியிட்டு கையை மேலே தூக்கியவாறு நூதன எதிர்ப்பு நடத்தினர்.
அமெரிக்காவில் நிறவேறி தாக்குதலால் கொல்லப்பட்ட ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்டதை கண்டித்து பெருமளவு போராட்டம் நடந்தது. மேலும் அதற்கான போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் அந்த கொலையை கண்டிக்கும் வகையிலும், நிறவெறிக்கு எதிராக தனது எதிர்ப்பை பதிவு செய்யும் வகையிலும் இருநாட்டு வீரர்களும் இதை செய்தனர். உடன் கள நடுவர்களும் இருந்தனர்.
அவர்கள் அணிந்திருந்த ஜெர்சியில் BLACK LIVES MATTER என்ற வாசகம் பொறிக்கப்பட்டு இருந்தது. இதனை இருநாட்டு அணியும் அணிந்திருந்தனர். போட்டி தொடங்குவதற்கு முன்னர் கொரோனா களத்தில் பணியாற்றும் கொரோனா வாரியர்ஸ்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மெளன அஞ்சலி செலுத்தியதும் குறிப்பிடத்தக்கது.