வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு ‘த்ரில்’ வெற்றி

Photo of author

By Parthipan K

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் 20 ஓவர் உலகக் கோப்பையின் ‘சூப்பர் 12’ லீக் போட்டிகள் நடந்து வரும் நிலையில், இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் வெஸ்ட் இன்டீஸ் அணியும், பங்களாதேஷ் அணியும் மோதின.

முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்த இரு அணிகளும், முதல் வெற்றி பெறும் முனைப்பில் களம் இறங்கின. சார்ஜாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியணது 142 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகப் பட்சமாக நிக்கோலஸ் பூரான் 22 பந்துகளில் 40 ரன்களை எடுத்தார். நிதானமாக ஆடிய ராஸ்டன் சேஸ் 46 பந்துகளில் 39 ரன்களை சேர்த்தார்.

பின்னர், 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 139 ரன்களை மட்டுமே எடுத்து 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அந்த அணியில் அதிகப் பட்சமாக லிட்டன் தாஸ் 44 ரன்களும், முகமதுல்லா 31 ரன்களும் சேர்த்தனர்.

கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவை பட்ட நிலையில் அன்ட்ரே ரஸ்ஸல் வீசிய கடைசி ஓவரில் 9 ரன்களை மட்டுமே பங்களாதேஷ் அணியால் எடுக்க முடிந்தது. கடைசி பந்தில் 4 ரன்கள் தேவை பட்ட நிலையில், அபாரமாக பந்து வீசி வெற்றிக்கு வித்திட்டார் ரஸ்ஸல்.
அதிரடியாக ஆடி 22 பந்துகளில் 40 ரன்களை சேர்த்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்த நிக்கோலஸ் பூரான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்