கேரளாவை அச்சுறுத்தும் West Nile வைரஸ் காய்ச்சல்!! இது எவ்வாறு பரவுகிறது? இதன் அறிகுறிகள் என்ன?
நம் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் West Nile என்ற புதிய வைரஸ் காய்ச்சல் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது.ஏற்கனவே பறவை காய்ச்சலின் தாக்கமே இன்னும் குறையாத நிலையில் புதிதாக பரவி வரும் West Nile வைரஸ் காய்ச்சலுக்கு திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் பலியாகி இருக்கிறார்.
நம் நாட்டில் வைரஸ் பாதிப்புகள் உருவாகும் மாநிலமாக கேரளா மாறி வருகிறது.தற்பொழுது பரவி வரும் West Nile வைரஸ் காய்ச்சலால் மக்கள் மிகுந்த அச்சத்துடன் இருக்கின்றனர்.
West Nile(வெஸ்ட் நைல்) காய்ச்சல் எவ்வாறு உருவாகிறது?
இந்த வைரஸ் காய்ச்சல் க்யூலெக்ஸ் என்ற கொசு மூலம் பரவுகிறது.இதனால் கொசுக்கள் தங்களை கடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
உலகில் கொசுக்கள் மூலம் பல ஆபத்தான வைரஸ் நோய்கள் உருவாகி உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது.சுகாதாரமற்ற வாழ்க்கை முறையால் தான் இதுபோன்ற வைரஸ் பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது.
West Nile(வெஸ்ட் நைல்) அறிகுறிகள்:
1)காய்ச்சல்
2)தசை வலி
3)தலைசுற்றல்
4)வாந்தி
5)மூளை பாதிப்பு
West Nile(வெஸ்ட் நைல்) வைரஸ் காய்ச்சல் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
இந்த வைரஸ் காய்ச்சல் கடந்த 2011 ஆம் ஆண்டு தோன்றி இன்றுவரை கேரளாவில் இருக்கிறது.இந்த West Nile(வெஸ்ட் நைல்) வைரஸ் காய்ச்சலில் இருந்து தப்பிக்க ஒரே வழி கொசுக்கள் கடிக்காமல் பார்த்துக் கொள்வது தான்.நம் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதன் மூலம் West Nile(வெஸ்ட் நைல்) காய்ச்சலில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும்.