எத்தியோப்பியாவை சார்ந்த முன்னாள் அமைச்சரான டெட்ரோஸ் அதனோம் உலக சுகாதார அமைப்பின் தலைவராக இருந்து வருகிறார். இவருடைய பதவிக்காலம் முடிவடைந்த சூழ்நிலையிலும் 2வது முறையாக அவர் மீண்டும் போட்டியிட்டார் என சொல்லப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், டெட்ரோஸ் அவர்களை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை என்ற காரணத்தால், அவர் மறுபடியும் உலக சுகாதார அமைப்பின் தலைவராக இருக்கிறார். அடுத்த 5 வருடத்திற்கு அவர் தலைவராக செயல்படுவார் என சொல்லப்படுகிறது.
நோய் தொற்று பரவும் போது பல சிரமங்களை எதிர்கொண்டு உலக நாடுகளின் கேள்விக்கு பதிலளித்து உலக சுகாதார அமைப்பை இவர் திறம்பட வழி நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக சுகாதார அமைப்பின் தலைவராக மறுபடியும் தேர்வாகியுள்ள இவருக்கு ஜெர்மனி, அமெரிக்கா, உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.