குறித்த தேதியில் பள்ளிகள் திறக்கப்படுமா? இன்று வெளியாகும் புதிய அறிவிப்பு!

0
81

தமிழ்நாடு முழுவதும் கடந்த 2 வருட காலமாக நோய்த்தொற்று அதிகரித்து வந்த காரணத்தால், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் செயல்படாமல் இருந்து வந்தன.

இதன் காரணமாக, சென்ற ஆண்டு நோய்த்தொற்று பரவல் குறையை தொடங்கியதைத் தொடர்ந்து சென்ற கல்வி ஆண்டில் செப்டம்பர் மாதம்தான் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் ஆரம்பமாயின.

மறுபடியும் நோய் பரவல் வேகமான நிலையில் மீண்டும் ஜனவரி மாதம் பள்ளிகள் மூடப்பட்டு பிப்ரவரி மாதத்தில் மறுபடியும் திறக்கப்பட்டன.

இந்த சூழ்நிலையில், இந்த வருடம் நிச்சயமாக பொது தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை சார்பாக அறிவிப்பு வெளியானது.

திருப்புதல் தேர்வு நடத்தப் பட்ட சூழ்நிலையில், மே மாதத்தில் மாநிலம் முழுவதும் 12 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டது.

அதேபோல 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடந்தன இந்த பொதுத் தேர்வு மே மாதம் இறுதியில் முடிவடைகிறது.

இதற்கு நடுவே மாநில பாடத்திட்டத்தில் செயல்படும் அரசு அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மே மாதம் 14 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்த மாணவர்களுக்கு ஜூன் மாதம் 2வது வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என முன்பே தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனாலும் கூட பிளஸ் 1 பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி, ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள், உள்ளிட்டவை மாநிலத்திலுள்ள 10,000க்கும் மேற்பட்ட பள்ளிகளில் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள், அரசுப்பள்ளிகளில் காலை உணவு திட்டத்திற்கான முன்னேற்பாடுகள், உள்ளிட்ட காரணங்களால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தார்கள்.

பள்ளிகள் திறக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும், பள்ளிக்கல்வித் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில், ஜூன் மாதம் 4வது வாரத்தில் பள்ளிகள் திறப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மிக விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்றும், தகவல் தெரிவித்தனர்.

இந்தநிலையில், இன்று காலை 10 மணியளவில் பள்ளிகள் திறப்பு தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.