சிவகார்த்திகேயனின், சூரி இணைந்து நடித்த படங்களில் காமெடிக்கு பஞ்சமே இருக்காது. அப்படி இருக்க அவர்களுக்கிடையின் சக நடிகர் என்பதை தாண்டி அண்ணன்,தம்பி பாண்டிங்கும் உண்டு என்பதை இருவருமே நிறைய பிரஸ் மீட்டிங்கில் தெரிவித்துள்ளனர். அவர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தும் பொது இடங்களில் பார்க்கவும் முடியாது. அந்த அளவு அவர்கள் உறவு உண்மை வாய்ந்ததாக உள்ளது. அவர்கள் நடித்த சில படங்கள் பின்வருமாறு,
1. மனம் கொத்தி பறவை,
2.கேடி பில்லா கில்லாடி ரங்கா,
3.வருத்தப்படாத வாலிபர் சங்கம்
4. மான் கராத்தே
5. நம்ம வீட்டு பிள்ளை போன்ற பல படங்களில் இருவரின் நகைச்சுவை பேசும்.
சீமை ராஜா படப்பிடிப்பில் பிரேக்கின் போது, சிவா சூரியிடம் அண்ணா உங்களுக்கென்று தனி கதை ஒன்று நடியுங்கள் அண்ணா. உங்களைப் போன்ற ஆட்கள் திரை உலகிற்கு தேவை என்று கூறியுள்ளார். அதற்கு விளையாட்டாக சூரி, தம்பி நான் பாட்டு ஒரு பாதையில போயிட்டு இருக்கேன் வேணாம் தம்பி அப்படின்னு சொல்லிட்டாரு என சிவா ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார்.
பின்னர் ஒரு நாள் அவரே போன் செய்து தம்பி உங்களிடம் ஒரு விஷயம் பேச வேண்டும். தம்பி, வெற்றி சார் எனக்கு ஒரு கதை கூறி நீங்கள் இதில் நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் என்றார். அண்ணே சூப்பர் அண்ணே கலக்கி விட்ருங்க என்றேன். அதற்கு அவரோ, அவர் சொல்லிட்டாரு தம்பி. எனக்கு தான் பயமாயிருக்கு என்ன பேசி இருந்ததாக சிவா ஒரு நிகழ்ச்சியில் சொன்னார். சிவா தைரியம் சொன்னதாகவும் அதில் குறிப்பிட்டு இருப்பார். தற்சமயம் அண்ணன் களத்தில் இறங்கி விட்டார் எனவும் பெருமை கொண்டார் சிவா.
சமீபத்தில் நடிகர் சூரி விடுதலை 2 பட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். அதில் செய்தியாளர்கள் பல கேள்வி எழுப்பினர். அவர் நிதானமாக தொடர்ச்சியாக கதாநாயகனாக நடிக்க உள்ளேன் என்றார். இன்னொரு செய்தியாளர் சிவகார்த்திகேயன் மீண்டும் இணைந்து நடிப்பீர்களா? எனக் கேட்டார். அதற்கு சூரியோ நல்ல படம் நிச்சயமாக நடிப்போம். அதில் யார் கதாநாயகன் என்ற கேள்வி கேட்க அது தம்பி தான் சொல்ல வேண்டும் என விட்டுக் கொடுக்காது உரிமையோடு கூறினார் சூரி.