இதுஎன்ன புது டுவிஸ்ட்! இனி இவர்களுக்கும் ரூ 10000 அபராதம்! வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை!!

Photo of author

By Pavithra

இதுஎன்ன புது டுவிஸ்ட்! இனி இவர்களுக்கும் ரூ 10000 அபராதம்! வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை!!

Pavithra

Updated on:

இதுஎன்ன புது டுவிஸ்ட்! இனி இவர்களுக்கும் ரூ 10000 அபராதம்! வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை!!

இருசக்கர வாகன ஓட்டுனர்
குடித்திருந்து பின்னால் அமர்ந்து இருக்கும் நபர் குடிக்காமல் இருந்தாலும், ஓட்டுனர்களுக்கு அபராதம் விதிப்பது போன்று,பின்னால் அமர்ந்து வருபவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என சென்னை பெருநகர காவல் துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

அதாவது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்து மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கையை குறைக்கும் வகையில் சென்னை பெருநகர காவல் துறை புதிய சட்ட திருத்தத்தினை கொண்டு வந்துள்ளது.

அதன்படி இருசக்கர வாகனத்தில் வாகன ஓட்டுநர் குடித்திருந்து பின்னால் அமர்ந்திருக்கும் நபர் மது குடிக்கவில்லை என்றாலும் அவர்களுக்கும் அபராத விதிக்கப்படும் என்றும்,இதேபோன்று கார் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் குடித்திருந்து அவர்களுடன் பயணிப்பவர்கள் மது அருந்தவில்லை என்றாலும் அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படுமென்று சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.

அதாவது தெரிந்த ஆட்டோ ஓட்டுநருடன் பயணம் செய்யும்போது அந்த ஆட்டோ ஓட்டுனர் மது குடித்து இருந்தால் அதில் பயணிப்பவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்றும் அதுவே சவாரிக்காக முகம் தெரியாத ஆட்டோ ஓட்டுநர்களுடன் பயணம் மேற்கொள்ளும் பொழுது இந்த விதிமுறை பின்பற்றப்படாது என்றும்,ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.பின்னால் அமர்ந்து வருபவர்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகை 1000-10000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த விதி தற்போது சென்னையில் மட்டுமே அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில்,விரைவில் தமிழ்நாடு முழுவதும் இந்த விதி அமல்படுத்தப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.