காதலித்து வந்த நிலையில் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு நடந்த அவலம்! பின் தெரிய வந்த உண்மை!

0
121
What a pity for a ninth grade student who fell in love! The truth that came to light later!
What a pity for a ninth grade student who fell in love! The truth that came to light later!

காதலித்து வந்த நிலையில் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு நடந்த அவலம்! பின் தெரிய வந்த உண்மை!

மயிலாடுதுறை அருகே குத்தாலம் அருகே அரசுப் பள்ளி ஒன்றில் ஒரு மாணவி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுமி கடந்த 7 ம் தேதி இரவு 9 மணி அளவில் அதே தெருவில் வசிக்கும் அவரது மாமா வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர். அதன் பிறகு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அதனால் பல்வேறு பகுதிகளிலும் சிறுமியின் உறவினர்கள் சிறுமியை தேடி வந்தனர்.

அதன் காரணமாக அந்த நாள் இரவே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தொடர்ந்து தேடி வந்த நிலையில் சிறுமியின் உறவினர்கள்  மாமாவின் வீட்டின் பின்புறம் உள்ள வாய்க்காலிலேயே சிறுமி மர்மமான முறையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சிறுமியின் லேக்கின்ஸ் பான்ட் கிழிந்து இரத்தக் கரை இருந்ததும் தெரிய வந்தது.

அதனை தடுத்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். அப்போது டிஎஸ்பி வசந்த ராஜ் சம்பவ இடத்திற்கு உடனே விரைந்தார். அதன் காரணமாக சிறுமியின் உடலை போலீசார் கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்து, அதன் பிறகு உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

அதன் மூலம் சிறுமி பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டு சிறுமி கொலை செய்யப்பட்டார் என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கினர். இன்ஸ்பெக்டர் வள்ளி தலைமையிலான தனிப்படை போலீசார் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பு குழு அமைத்து விசாரணைகளை மேற்கொண்டனர். சிறுமியின் உடலை வாய்க்காலில் இருந்து உறவினர்கள் வீட்டிற்கு தூக்கி வந்ததன் காரணமாக அங்கு வேறு எந்த தடயமும் கிடைக்கவில்லை என்றும் கூறினார்கள்.

எனவே சிறுமியின் உறவினர்கள் அளித்த தகவலின் பேரிலேயே அங்கு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியினர் சிலரை போலீசார் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து ரகசியமாக அவர்களை கண்காணித்தும் வந்தனர். மருத்துவ பரிசோதனையின் படி சிறுமியின் சந்தேக மரணம் கொலை வழக்காக மாற்றப்பட்டது.

இந்த தகவல் அறிந்த உடனேயே அதே தெருவைச் சேர்ந்த மாரிமுத்து மகன் பிரபாகர் என்ற 25 வயது இளைஞர் அங்கிருந்து பேருந்தின் மூலம் ஏறி தப்ப முயன்றார். எனவே அவரை பிடித்து காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரிக்க ஆரம்பித்தனர். அப்போது அந்த உறவினரான பிரபாகரன் கடந்த மூன்று மாதங்களாக சிறுமியுடன் காதலில் இருந்து  வந்ததாகவும், அந்த சிறுமியுடன் தொடர்ந்து பல முறை உடலுறவு கொண்டதாகவும் தெரிவித்தார்.

அதன் காரணமாக போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இந்த சம்பவத்தன்று அங்கு சிறுமியை தனியாக அழைத்து அவர்கள் தனிமையில் இருந்த போது அப்பகுதி இளைஞர்கள் உடன் சகஜமாக பேசுவதை நிறுத்தும் படி கண்டித்து கூறிள்ளார். அதன் காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக தனது வேட்டியில் சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றுள்ளார்.

இதில் மயக்கமடைந்த சிறுமியை, வாய்க்காலில் தூக்கி போட்டு வைத்துள்ளார். அதன் பிறகு அந்த நீரில் மூச்சு திணறி இறந்துள்ளார். அதன் பிறகு உறவினர்களுடன் சேர்ந்து தானும் தேடி வந்துள்ளார். தற்போது கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Previous articleசமந்தாவை பற்றிய புதிய அறிவிப்பு! விவாகரத்துக்கு பிறகு வெளியான இந்த திட்டம்!
Next articleதமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!!