நீதிபதிக்கு ஏற்பட்ட பரிதாப கதி! சிசிடிவி மூலம் கண்டறிந்த போலீசார்!

Photo of author

By Hasini

நீதிபதிக்கு ஏற்பட்ட பரிதாப கதி! சிசிடிவி மூலம் கண்டறிந்த போலீசார்!

ஜார்க்கண்ட் மாநிலத்தின் தான் தன்பாத் மாவட்ட நீதிபதியாக இருப்பவர் உத்தம் ஆனந்த். இவர் ஹிராப்பூரில் உள்ள தனது வீட்டிற்கு அருகில் நேற்று காலை நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அவர் பின்னால் இருந்து வந்த ஆட்டோ ஒன்று சாலையில் செல்லும்போது, அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. ஆட்டோ மோதி அதன் காரணமாக படுகாயமடைந்த நீதிபதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நீதிபதியின் மரணம் விபத்து என்று கருதப்பட்ட நிலையில், சாலையோரம் நடந்து சென்ற அவர் மீது ஆட்டோ ஒன்று மோதியது நிற்காமல் சென்றுள்ளது. இது அங்கு இருந்த ஒரு  சிசிடிவி காமெராவின் காட்சி மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து  போலீசாரிடம் அளித்த புகாரில் நீதிபதியின் மனைவி கிருத்திகா இவ்வாறு கூறியுள்ளார். தனது கணவர் அதிகாலை 5 மணிக்கு வீட்டை விட்டு வெளியேறினார். அவர் நீண்ட நேரமாகியும், திரும்பாததன் காரணமாக, நாங்கள் அவரை தேட தொடங்கினோம். அவரை உள்ளூரைச் சேர்ந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர்.

பின்னால் இருந்து ஒரு ஆட்டோ அவரை தாக்கி உள்ளது. தயவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்கவும் என்றும் கூறியுள்ளார். நீதிபதி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. நீதிபதி இறந்ததன் காரணமாக அதில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். முன்னாள் பாஜக எம்எல்ஏ சஞ்சீவ் சிங் உதவியாளர் ரன்ஜீவ் சிங் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு, ஜாமீன் கொடுக்க அண்மையில் நீதிபதி மறுத்துவிட்டார்.

சிறையில் உள்ள இருவரும் தாதா அமந்த்சிங் கும்பலை சேர்ந்தவர்கள். எனவே நீதிபதி மரணத்தில் இந்த கும்பலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகமும் தற்போது போலீசாருக்கு எழுந்துள்ளது. இதில் உண்மையை வெளிக்கொண்டுவர சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு ஜார்க்கண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது. ஜார்கண்ட் ஹை கோர்ட் வழக்கறிஞர்கள் கூறும்போது இது ஒரு திட்டமிட்ட கொலை என்றும், அந்த ஆட்டோ டிரைவர் வேண்டும் என்று நீதிபதியை தாக்கியதை சிசிடிவி காட்சிகள் தெள்ளத் தெளிவாக காட்டுகின்றன எனவும் கூறியுள்ளார்.