பிக்பாஸ் ரைசாக்கு என்னாச்சு! ஐ படக் கதையைப்போல் அவர் வாழ்வில் ஏற்பட்ட விபரீதம்!

Photo of author

By Rupa

பிக்பாஸ் ரைசாக்கு என்னாச்சு! ஐ படக் கதையைப்போல் அவர் வாழ்வில் ஏற்பட்ட விபரீதம்!

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் அதிக அளவு ரியாலிட்டி ஷோக்கள் பிரபலமடைந்து வருகிறது அதில் பிக்பாஸ்,குக் வித் கோமாளி என பல நிகழ்சிகள் அடங்கும்.மக்கள் அதிக அளவு வரவேற்பது பிக்பாஸ் ஷோ தான்.இந்நிகழ்ச்சி-க்கு நடுவராக வரும் கமலுக்காக பலர் இந்த ஷோ வை பார்த்து வருகின்றனர்.இந்த ஷோ வானது மூன்ற மாதங்கள் நடந்தாலும் அதிக அளவு TRB யை உயர்த்தி விடுகிறது.இந்த ஷோ வில் 15 பிரபலங்களை அனுப்புகின்றனர்.

அதன்பின் அவர்களுக்குள் போட்டிகள் வைத்து மதிப்பெண்கள் அடிப்படையிலும்,மக்களின் ஓட்டுக்கள் அடிப்படையிலும் வாரம் இறுதியில் ஒருவர் போட்டி களத்திலிருந்து வெளியேருவர்.கடைசியாக நன்கு பேர் மட்டும் இறுதி கட்டத்தை நோக்கி செல்வர்.அந்தவகையில் முதல் சீசனில் கலந்துக்கொண்டவர்களை,இன்றளவும் மறக்காமல் மக்கள் பேசி வருகின்றனர்.

பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துக்கொண்ட யாரையும் மக்கள் இன்றளவும் மக்கள் மறக்க வில்லை.அதிலும் குறிப்பாக ஜூலி,ரைசா,ஓவியா,ஹரிஷ் ஆகியோர் மிகவும் பிரபலமடைந்தனர்.அந்த சீசனில் ஹரிஷ்-க்கும்,ரைசா-விற்கும் காதல் மலர்ந்ததாக அனைவரும் பேசினர்.அதன்பிறகு இவர்கள் இணைந்து பியார் பிரேமம் காதல் என்ற படம் வெளிவந்தது.ரைசாவிற்கு அதிக அளவு மேக்கப் போடும் பழக்கம் உள்ளது.அது பிக்பாஸ் யில் அவர் இருக்கும் போதே பலர் கிண்டல் செய்துள்ளனர்.

தற்போது அந்த மேக்கப்பே அவருக்கு வினையாக முடிந்துள்ளது.அவர் ஓர் தனியார் மருத்துவமனையில் முக பராமரிப்புக்காக சென்றுள்ளார்.அப்போது அம்மருத்துவமனையில் புதுவித பேஷியளுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.ரைசா முதலில் அந்த பேஷியலை வேண்டாமென்று கூறியுள்ளார்,அதன்பின் மருத்துவரின் கட்டாயத்தால் அந்த பேஷியலை செய்துக்கொண்டார்.அந்த பேஷியளுக்கு பிறகு அவரது முகத்தில் சிறிய மாற்றங்கள் நடக்க தொடர்ந்ததை அடுத்து அவர் அம்மருத்துவரை காண சென்றுள்ளார்.அம்மருத்துவர் ரைசாவை காண மறுத்துள்ளார்.அதன்பின் ரைசா தனது இன்ஸ்டா பக்கத்தில் அந்த பேஷியலால் முகத்தில் அதிக அளவு வீக்கம் ஏற்பட்ட புகப்படத்தை பதிவிட்டுள்ளார்.அந்த புகைப்படம் ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.ஐ பட கதையை போல இவருக்கும் போலி மருத்துவத்தால் பெரிய பாதிப்படைந்துள்ளார்.