விநாயகர் சதுர்த்தி அன்று தடையை மீறி ஊர்வலம் சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும்?

0
124

நாடு முழுவதும் கரோனா பரவல் காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஊரடங்கு காரணமாக விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், சிலைகளை ஊர்வலம் எடுத்துச் செல்லவும் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பத்திரிக்கையாளர் அன்பழகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் ஒரு லட்சத்தி 50 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவதாக கூறியுள்ளதை சுட்டிக்காட்டி அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தடையை மீறி விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்றாள், இந்து முன்னணி கட்சியின் மூத்த தலைவர் ராமகோபாலன் மற்றும் காடேஸ்வரன் சுப்பிரமணியன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குறிப்பிட்டுட்டிருந்தார்.

இந்த மனுவினை தலைமை நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசின் தடையை உத்தரவை மீறும் வகையில் இந்து முன்னணியினர் கூறி மிரட்டல் விடுத்துள்ளதாக மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இது குறித்து பேசிய நீதிமன்ற நீதிபதிகள், இதுபோன்ற மிரட்டல்களிலிருந்து அரசை காப்பாற்றுவது நீதிமன்றத்தின் வேலையில்லை. மேலும் அரசின் உத்தரவுக்கு கட்டுப்படாமல் மீறப்பட்டால் அதற்கு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும்” என தெரிவித்து வழக்கினை முடித்து வைத்தனர்.

Previous articleஎடப்பாடி பழனிச்சாமி சொன்னதுபோல் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை வழங்குவாரா? அல்லது 20000 கோடி கடன் வாங்குவாரா?
Next articleபள்ளிகள் திறக்கும் வரை உலர் உணவுப் பொருள் வழங்கப்படும் : மாநில அரசு !