விஜய்யை சந்திக்க அஜித் செய்த செயல்!! பதட்டமடைந்து விஜய் சொல்லிய வார்த்தை!!
தளபதி விஜய்யின் 67 ஆவது திரைப்படம் இயக்குனர் லோகேஷ் கனகராஜால் இயக்கப்பட்டு தற்போது வெளியிடுவதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
அந்த வகையில் தற்போது விஜய்யின் 68 ஆவது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அனைத்து படங்களிலும் சீரியஸாகவே நடித்துக் கொண்டிருந்த விஜய் தற்போது இந்த படத்தில் வெங்கட் பிரபுவுடன் இணைந்து ஜாலியான ஒரு படத்தை கொடுக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விஜய்யின் லியோ பட வெளியீட்டிற்கு பிறகு துவங்கப்பட உள்ளது. மேலும் இத்திரைப்படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் பேசியிருப்பதாவது, கடந்த 2011 ஆம் ஆண்டில் தல அஜித் எதிர்மறை கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமான ஒரு படம் தான் மங்காத்தா.
இந்த மங்காத்தா படப்பிடிப்பு நடந்த பகுதியிலேயே தான் விஜய்யின் வேலாயுதம் படப்பிடிப்பு நடந்துள்ளது. இதை வெங்கட் பிரபு அஜித்திடம் கூறி உள்ளார்.
அப்போது வெங்கட் பிரபு நீங்களும் விஜய்யும் என்னுடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுக்க விரும்புவதாக கூறி உள்ளார். எனவே அஜித் உடனடியாக சரி என்று கூறி விட்டு விஜய்யை பார்க்க சென்று விட்டார்.
எனவே அஜித்தும் வெங்கட் பிரபுவும் பக்கத்துக்கு செட்டிற்கு விஜய்யை பார்க்க சென்றனர். அப்போது விஜய் அவரின் கேரவனில் இருந்தார். இதனால் அஜித் அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டு விஜய்யை பார்க்க அவரின் கேரவனுக்கு வெளியே காத்திருந்தார்.
சற்று நேரத்திற்கு பிறகு வெளியே வந்த விஜய், அஜித்தை பார்த்த ஆர்வத்தில் பதட்டமடைந்து “அண்ணா” ஏன் வெளியே நிற்கிறீர்கள் உள்ளே வாருங்கள் என்று அழைத்து சென்றார்.
விஜய்யிடம் பேசிய அஜித், வெங்கட் பிரபுவிற்கு நம்முடன் புகைப்படம் எடுக்க ஆசை அதனால் வந்தேன் என்று கூறி உள்ளார். வெங்கட் பிரபுவிற்கு ஒன்றும் புரியவில்லை தான் ஆசைப்பட்டதை அஜித் விஜய்யிடம் கூறி அவரும் ஒப்புக்கொண்டதை வெங்கட் பிரபு வியந்து பார்த்துள்ளார்.
இருவருக்கும் இடையேயான நட்பைப் பார்த்து இவர் வியப்படைந்துள்ளார். இந்த நிகழ்வை தற்போது வெங்கட் பிரபு அளித்த பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
இவர்கள் மூவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. திரையுலகில் அஜித் மற்றும் விஜய் மோதிக்கொண்டாலும், உண்மையில் இவர்கள் இருவரும் சிறந்த நண்பர்கள் என்பதற்கு இது ஒரு உதாரணமாகும்.