
ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளை முன்வைத்து அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி. இந்த கட்சி 1982ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொல்.திருமாவளவன் கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கிறார். இவர் ஆரம்பத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தாலும் திமுகவுடன் இணைந்ததில் இருந்தே திமுகவிற்கு கூஜா தூக்கும் வேலையை தான் அதிகம் செய்து வருகிறார்.
விசிக கட்சியின் ஓட்டுகள் தமிழ்நாட்டில் அதிக அளவில் இருப்பதால் திமுக, அதிமுக, பாஜக, தவெக போன்ற கட்சிகள் எப்படியாவது தங்கள் கூட்டணியில் விசிகவை இணைத்து விடவேண்டும் என்று முனைப்பு காட்டி வருகிறார்கள். ஆனால் திருமாவளவனோ தன்னுடைய பலம் என்ன என்று தெரியாமல் திமுகவுக்கு தான் துணை நிற்பேன் என்கிற தோனியில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
அண்மையில் திருமா அளித்த பேட்டி ஒன்றில் துணை முதலமைச்சர் பதவி கொடுக்கிறேன் என்று சொல்லியும் நீங்க ஏன் அந்த கூட்டணிக்கு போக மறுக்கிறீர்கள் என்கிற கேள்வியை பத்திரிக்கையாளர்கள் திருமாவளவனிடம் கேட்டனர். துணை முதலமைச்சர் பதவி கொடுத்தா நான் அந்த கூட்டணிக்கு போகணுமா? நேத்து கட்சி ஆரம்பிச்சவன் எல்லாம் நான் தான் முதல்வர்ன்னு சொல்லிக்கிட்டு பிரச்சாரம் பண்ணுறாங்க. நான் பொதுவாழ்க்கையில் அரசியலில் 35 வருடங்களாக இருக்கிறேன்.
எனக்கு என்ன முதலமைச்சர் ஆவதற்கு தகுதி இல்லையா? நானும் தான் ரௌடின்னு சொல்லிட்டு என்னை வந்து முதலமைச்சர் ஆக்குங்கன்னு என்கிட்ட வந்து கேக்குறாங்க. எனக்கு இருக்க அனுபவத்துக்கு நான் முதலமைச்சர் பதவிக்கே தகுதியானவன். கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தத்தான் இப்படி துணை முதல்வர் பதவி எனக்கு தரேன்னு மற்ற கட்சிகள் சொல்கிறார்கள் என பதில் கொடுத்துள்ளார் திருமாவளவன். திருமாவின் இந்த பேச்சு விஜய் மற்றும் எடப்பாடி பழனிச்சாமியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.