அண்ணாமலை சொன்னது சரியாக போச்சு.. திமுக ஸ்ரீ ராம ஜெயம் என சொல்லும்- அமைச்சர் சேகர்பாபு!! 

Photo of author

By Rupa

 

கடந்த சில நாட்களுக்கு முன்பாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திமுக ஆட்சியானது ராமர் ஆட்சி வழி நடக்கிறது என்று கூறியது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய இடத்தை பிடித்தது. இதனைத் தொடர்ந்து அண்ணாமலை ஒரு பேட்டியில், திமுக அமைச்சரே தற்பொழுது தாங்கள் ராமர் ஆட்சி போல் தான் செயல்பட்டு வருகிறோம் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து மற்ற அமைச்சர்கள் மற்றும் ஸ்டாலின் உள்ளிட்டோறும் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஸ்ரீ ராம ஜெயம் என்று சொல்வார்கள் எனத் தெரிவித்தார்.

அண்ணாமலை கூறியதற்கு இணங்க இன்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும் நாங்கள் ஸ்ரீராம ஜெயம் கூட சொல்லுவோம் என தெரிவித்துள்ளார். மேற்கொண்டு அவர் கூறியதாவது, வரும் 24 மற்றும் 25 ஆம் தேதி முருகர் மாநாடு நடக்க உள்ளது. இதில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் அவர்களை நேரடியாகவே மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறேன். குறிப்பாக தமிழகத்தில் மக்கள் தங்கள் கடவுளை வழிபட முழு சுதந்திரம் உள்ளது.

இப்படி இருக்கையில் அண்ணாமலையின் பாகுபாடான எண்ணம் எதுவும் இங்கு செல்லுபடியாகாது. அந்த வகையில் ஜெய் ஸ்ரீ ராம், அரோகரா, கோவிந்தா கோவிந்தா என எதுவாக இருந்தாலும் அனைத்தையும் சமமாகவே நாங்கள் ஏற்றுக்கொள்வோம். மேலும் மக்களின் வழிபாட்டு உரிமையில் திமுக ஒருபோதும் தலையிடாது. அது மட்டுமின்றி திருப்பதியை பின்னுக்கு தள்ளும் அளவிற்கு திருச்செந்தூர் கோவிலில் மேம்பாட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்றது வருகிறது. தெய்வீகத்தில் பாகுபாடு காட்ட மாட்டோம் என கூறிவிட்டு கோவில்களில் திருப்பதியை சுட்டிக்காட்டி பேசி இருப்பது சரி தானா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.