புதிய கல்விக் கொள்கையில் நமக்கு குறைகள் என்னென்ன?

Photo of author

By Parthipan K

NEP முதல் பேரிடி சத்துணவானது விலைவாசி மற்றும் பணவீக்கத்தை பொருத்து தொடர்ந்து மாற்றப்பட்டு வரும்‌. அரிசி விலை ஏறினால் அரிசி சோறு இல்லை என்கிறார்கள் நேரடியாக.

*பாடநூல்களை அந்தந்த மாநில அரசுகள் அச்சடித்துக்கொள்ளலாம் ஆனால் பாடத்திட்டம் மத்திய அரசே வழங்கும். இந்தியா போன்ற நாட்டிற்கு ஒரே கல்வித்திட்டம் என்பது முட்டாள்தனம். மேலும் பாடத்திட்டம் மத்திய அரசே வழங்கும் என்பது மாநில அரசின் உரிமைகளுக்கு எதிரான செயல்

* 5+3+4கல்வி முறை முட்டாள்தனத்தின் உச்சம். எப்படி ஒரு மாணவன் எட்டாம் வகுப்பு முடித்தவுடனே பொதுப்பாடங்களுடன் அவனது விருப்ப பாடத்தை தேர்வு செய்வான். இதில் அனைத்தும் செமஸ்டர் வடிவம். பத்தாம் வகுப்பு வரை 17% என்று உள்ள இடைநிற்றல் மேல்நிலையில் 36% என்று உள்ளது இப்போது வரை. இந்த கொள்கையால் இந்த சதவீதம் இன்னும் அதிகரிக்கும்.தமிழகத்தில் மட்டும்தான் தடுக்கி விழுந்தால் தொடக்கப்பள்ளி ஓடி வந்து விழுந்தால் உயர்நிலைப்பள்ளி என்ற நிலை உள்ளது.

ஏற்கனவே மத்திய அரசு குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ள பள்ளிகளை மூட வற்புறுத்தி வரும் நேரத்தில் எங்கோ ஒரு இடத்தில் தொடங்கப்படும் கல்வி வளாகத்தில் மாணவர்கள் சேரலாம் என்பது அரசுப்பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் மீது திணிக்கப்படும் தாக்குதல்.

* மூன்றாம் வகுப்புவரை மொழிப் பாடம் மற்றும் கணிதம் மட்டுமே. இப்படி இருந்தால் அவன் சூழ்நிலையில் என்பதையே மறந்து கேள்விகேட்பதையே மறந்துவிடுவான். மிஷன் நாளந்தா மிஷன் தக்சஷீலா கேட்க நன்றாக இருக்கிறது, இதன் நோக்கம் வசதியற்ற மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள கல்லூரிகளை மூடவேண்டும் என்பதே. அவற்றை மேம்படுத்த முயற்சிக்காமல் மூட வேண்டும் என்று நினைப்பது எந்த வகையில் நியாயம். கிராமப்புற மாணவர்களை படிக்க விடாமல் செய்வதாகும்.

ஒப்பந்த மற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்படுவார். தமிழகத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பணியில் இருக்கும் ஆசிரியர்கள் இனி தலையில் துண்டு போட்டுக்கொள்ளலாம். பிடிஏ மூலம் நடைபெறும் நற்செயல்கள் இனி நடைபெறாது. கொடையுள்ளம் கொண்ட தனியார் அமைப்புகள் கல்வி நிறுவனங்கள் தொடங்க தடையேதும் இல்லை இனி. ஜியோ கல்வியில் முதலீடு செய்ததில் வியப்பேதும் இல்லை. இரண்டிற்கும் உள்ள தொடர்பு இன்னும் தெளிவு படுத்தப்பட வேண்டுமா?

*பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் விரும்பும் பள்ளிகளில் படிக்கும் உரிமை என்று கூறி அதற்கான கட்டணத்தை அரசே செலுத்துகிறது. இதன் காரணமாக ஆகும் செலவில் கிட்டத்தட்ட முழு வசதியுடன் 150 புதிய பள்ளிகள் நம்மால் உருவாக்க முடியும். இதில் கல்வியில் மேலும் தனியார் முதலீடு ஆசிரியர்கள் பதவி உயர்வில் இனி திறமை மற்றும் ஆளுமை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். கல்வி நிலைய உயர்பதவிகளில் ஆர்வமும் ஊக்கமும் நிறைந்த நபர்கள் மட்டுமே நியமிக்கப்படுவர்.

*போட்டித்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்களுக்கு கூடுதலாக நேர்முகத்தேர்வும் உயர்பதவியில் நூல் கொண்யடு இருக்கும். வகுப்பறை கற்பித்தல் தேர்வும் நடைபெறும்.

* இப்போது இருக்கும் பி.எட் பாடமுறை 2030 வரை மட்டுமே. அதன்பிறகு 4 வருட ஒருங்கிணைந்த பி.எட் பட்டமாக மாற்றப்படும்.

*மூன்றாம் வகுப்பு வரை ஆங்கிலம் கிடையாது. ஐந்தாம் வகுப்பு வரை ஆங்கிலம் விருப்பபாடம் மட்டுமே.

* யூஜிசி இனி உயர்கல்வி மானியதுறை. MHRD இனி உயர்கல்வி துறை அமைச்சகமாகிறது. மனிதவள மேம்பாடு அவுட். ஆய்வு மானியங்களில் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் சமவுரிமை. இது மாநில பல்கலைக்கழகங்களுக்கு பெருத்த அடியாக இருக்கும்.

*கலை அறிவியல் படிப்புகளுக்கும் நாடு தழுவிய நுழைவுத்தேர்வு.

 

* இனி மதிப்பெண் சான்றிதழ் மாநில அரசு வழங்கும். ஆனால் மதிப்பெண் இணையாக்கம் மத்திய அரசுதான் செய்யும்.

@bharath_kiddo twitter .