மோடி குறித்து அவதூறு பேச்சு!! ராகுல் காந்திக்கு நீதிமன்றம் விதித்த ஜாமீன் நிபந்தனைகள் என்னென்ன?

Photo of author

By Savitha

மோடி குறித்து அவதூறு பேச்சு!! ராகுல் காந்திக்கு நீதிமன்றம் விதித்த ஜாமீன் நிபந்தனைகள் என்னென்ன?

கோலாரில் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற அரசியல் பொதுக்கூட்டத்தில், அனைத்து கொள்ளையர்களும் மோடி என்ற குலப்பெயரையை ஏன் கொண்டிருக்க வேண்டும் என பேசியதற்கு ராகுல் காந்திக்கு எதிராக பாஜக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான புர்னேஷ் மோடி சார்பில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த அவதூறு வழக்கை சூரத் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் எச்.எச். வர்மா விசாரித்தார். இந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளி என்று அறிவித்து, அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த 23-ஆம் தேதி தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யும் வகையில் தீர்ப்பை 30 நாள்களுக்கு நிறுத்தி வைத்து, ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டார்.

அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த தீர்ப்புக்கும், தண்டணைக்கும் இடைக்கால தடை கோரியும், ஜாமீன் கோரியும் சூரத் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த சூரத் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ராபின் பி மொகேரா நேற்று விசாரித்ததார்.

இந்த வழக்கின் உத்தரவு விவரங்கள் இன்று வெளியாகி உள்ளன

1. ராகுல் காந்திக்கு மார்ச் 23ஆம் தேதி விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் தண்டனை நிறுத்தி வைக்கப்படுகிறது.

2. இந்த மேல்முறையீடு மனு விசாரித்து முடிக்கும் வரை ராகுல் காந்திக்கு 15 ஆயிரம் ரூபாய் பிணை தொகை, உத்தரவாதத்துடன் கூடிய நிபந்தனையின் பேரில் ஜாமீன் வழங்கப்படுகிறது.

3. இந்த மேல்முறையீடு மனு விசாரணையின் போது மனுதாரர் ராகுல் காந்தி ஆஜராக வேண்டும்.

4. மனுதாரர் ராருல் காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக எந்தவொரு குற்றத்திற்காக ஜாமீன் வழங்கப்பட்டதோ, அதே போன்று அவதூறு குற்றச்செயல்களில் ஈடுபடக்கூடாது.

5. இந்த நிபந்தனைகளை மனுதாரர் ராகுல் காந்தி ஏற்றுக்கொள்வதாக தெரிவித்ததால், இந்த நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுகிறது.

6. ஏப்ரல் 11-ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய புர்னேஷ் மோடிக்கு உத்தரவிடுப்படுகிறது.

அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்புக்கு இடைக்கால தடை கோரிய மனு மீதான விசாரணையை ஏப்ரல் 13-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது.