Kanavu Palangal in Tamil : இந்த தானியங்கள் அனைத்தும் கனவில் வந்தால் பலன்கள் என்ன! முழு விவரங்கள் இதோ!

Photo of author

By Parthipan K

Kanavu Palangal in Tamil : இந்த தானியங்கள் அனைத்தும் கனவில் வந்தால் பலன்கள் என்ன! முழு விவரங்கள் இதோ!

Parthipan K

Updated on:

Kanavu Palangal in Tamil : இந்த தானியங்கள் அனைத்தும் கனவில் வந்தால் பலன்கள் என்ன! முழு விவரங்கள் இதோ!

அரிசி கனவில் வருவதால் ஏற்படும் பயன்கள்:அரிசி நிறைந்த கூடையை கனவில் கண்டால் நன்மைகள் உண்டாகும்.

உணவு கனவில் வருவதால் ஏற்படும் பயன்கள்:உணவு உண்பது போல் கனவு கண்டால் தனலாபம் உண்டாகும்.உணவு சமைப்பது போல் கனவு கண்டால் முதலாளியாக இருப்பவர்கள் தொழிலாளியாக மாறுவார்கள் என்பதைக் குறிக்கிறது.

எள்ளு கனவில் வருவதால் ஏற்படும் பயன்கள்:எள்ளை கனவில் கண்டால் அசுப காரியம் ஏற்படப்போவதை குறிக்கிறது.மேலும் பாத்திரம் நிறைய எள் இருப்பது போல் கனவு வந்தால் செலவுகள் ஏற்படும். மனசஞ்சலம் உண்டாகும் என்று பொருள்.

கோதுமை கனவில் வருவதால் ஏற்படும் பயன்கள்:கோதுமை குவித்து வைக்கப்பட்டிருப்பது போல் கனவு கண்டால் உங்களுடைய வாழ்க்கையில் வளமும், செழிப்பும் ஏற்படப்போகின்றது என்று பொருள்.

தோட்டத்தில் உள்ள பழுத்த பழம், விளைந்த கோதுமை, விளைந்த தானியங்களை கனவில் கண்டால் பணம் கிடைப்பதற்கான நேரம் விரைவில் வரும் என்பதைக் குறிக்கிறது.

தானியங்கள் கனவில் வருவதால் ஏற்படும் பயன்கள்:தானியத்தை கனவில் கண்டால் செல்வம் பெருகும் என்பதைக் குறிக்கிறது. நவதானியங்களை கனவில் கண்டால் ஆயுள் விருத்தி உண்டாகும். பை நிறைய தானியங்கள் இருப்பது போல் கனவு கண்டால் சுபம் உண்டாகும்.