சனிக்கிழமை நாளில் இவற்றை செய்தால் இத்தனை விளைவுகளா! தெரியாமல் கூட செய்து விடாதீர்கள்!
ஒவ்வொரு கிழமையிலும் ஒவ்வொரு பொருள் வாங்குவதில் அதிர்ஷ்டம் மற்றும் துரதிஷ்டம் இருக்கிறது. அப்படி சனிக்கிழமையில் இந்தப் பொருளை வாங்குவதன் மூலம் உங்கள் வீட்டில் வீண் சண்டைகளும் பிரச்சனைகளும் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.
அதுமட்டுமின்றி தீராத கடன் பிரச்சினையும் உடல்நலக்குறைவு ஏற்படும். சனி பகவான் ஆதிக்கம் செலுத்தும் பொருளாக இரும்பு கருதப்படுகிறது. சனிக்கிழமை அன்று இரும்பு வாங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அப்படி சனிக்கிழமையன்று இரும்பு சம்பந்தமான எந்த ஒரு பொருட்களை வாங்கினாலும் குடும்பத்தில் தேவையற்ற சண்டைகளும் சச்சரவுகளும் நிலவும்.
இப்படிப்பட்ட இரும்பு பொருட்களை வாங்கி நாம் மற்றவர்களுக்கு தானம் செய்தால் நம்முடைய கடன் தீரும் என்று நம்பப்படுகிறது. கோவில்களுக்கு சனிக்கிழமை அன்று இரும்பு பொருட்களை வாங்கித் தருவது மிகவும் நல்லது.
எண்ணெயில் 108 லட்சுமிகள் வாசம் செய்வதாக ஐதீகம் கூறுகிறது. அப்படி லட்சுமி வாசம் செய்யும் எண்ணெயை மற்றும் உப்பை நாம் சனிக்கிழமை அன்று வாங்குவது நல்லது அல்ல. அவற்றை வெள்ளிக்கிழமை வாங்குவதன் மூலம் நம் வீட்டில் செல்வம் கொழிக்கும்.
மாவு பொருட்கள் மற்றும் கூர்மையான ஆயுதங்கள் போன்றவற்றை சனிக்கிழமையில் வாங்குவதை தவிர்ப்பதன் மூலம் துன்பத்தில் இருந்து விடுபடலாம். வீட்டை சுத்தம் செய்ய பயன்படுத்தும் எந்த ஒரு பொருட்களையும் சனிக்கிழமை அன்று வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
சனிக்கிழமை எள் வாங்க கூடாது ஏனெனில் எள் என்பது சனி பகவானுக்கு உரிய பொருட்களில் ஒன்றாக உள்ளது. எள் எண்ணெய் கொண்டு சனிக்கிழமையன்று சனி பகவானுக்கு தீபமேற்றினால் சகல சவுபாக்கியங்களும் உண்டாகும் என சாஸ்திரம் கூறுகிறது.