நாளைய சூரிய கிரகணத்தில் தோசத்திற்கு உரிய நட்சத்திரங்கள் என்னென்ன?

Photo of author

By Pavithra

நாளைய நடக்கவிருக்கும் சூரிய கிரகணத்தில் கீழ்வரும் ஐந்து நட்சத்திரங்கள் தோசத்திற்கு உரிய நட்சத்திரங்களாக கூறப்படுகின்றன. அந்த நட்சத்திரங்கள் என்னவென்றும் அதற்கான பரிகாரங்களை பற்றியும் இந்த பதிவில் காணலாம்.

ஜூன் 21 ஞாயிற்றுக் கிழமை அன்று நிகழவிருக்கும் சூரிய கிரகணம் கிட்டத்தட்ட 6 மணி நேரம் வரை நீடிக்கும்என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.இந்திய நேரப்படி காலை 9.15 மணிக்கு தொடங்கி மதியம் 12.10மணிக்கு சூரிய கிரகணம் உச்சமடையும் மேலும் மதியம் 3.02 மணிக்கு கிரகணம் முடிவடையும்.

இந்த ஆறு மணி நேரம் என்பது உலகளாவிய கணக்கு ஆகும்.இது இந்த ஆண்டின் தொடக்கத்தில் முதல் நீண்ட கிரகணம் ஆகும். இந்தமுறை இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இந்த கிரகமானது தெரியும் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

நாளை சூரிய கிரகணத்தின் போது ஐந்து நட்சத்திரங்கள் கிரகத்திற்குரிய நட்சத்திரங்களாக கூறப்படுகின்றன.
மிருகசீரிஷம்,அவிட்டம்,சித்திரை,ரோகினி,திருவாதிரை ஆகிய நட்சத்திரங்களாகும்.

தோசம் என்ற உடன் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. இந்த ஐந்து நட்சத்திரகாரர்களும் நாளை தானம் செய்தாலே இந்த தோஷத்தில் இருந்து நிவர்த்தி பெறலாம்.

என்ன பொருட்களை தானம் செய்வது?

இந்த தோஷத்திற்கு உறிய நட்சத்திரங்களை உடையவர்கள் சூரிய பகவானுக்கு உகந்த கோதுமை,உளுந்து கொள்ளு,ஆகிய மூன்றையும் மட்டை உரிக்காத தேங்காயுடன் வெற்றிலைப் பாக்கு, பழத்துடன் வைத்து தானமாக வழங்க வேண்டும்.

இவ்வாறு வழங்கி தெய்வ வழிபாடு செய்தால் இந்த தோஷம் நிவர்த்தி அடையும் என்று ஜோதிடப்படி கூறப்படுகிறது.