இன்று சூரிய கிரகணத்தின் போது வழிபாடு செய்யும் முறை

0
93

இன்று ஜூன் 21 ஞாயிற்றுக்கிழமை நிகழவிருக்கும் சூரிய கிரகணம் கிட்டத்தட்ட 6 மணி நேரங்கள் வரை நீடிக்கும் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.இந்திய நேரப்படி 9.15 மணிக்கு தொடங்கி 12.10 மணிக்கு உச்சமடைந்து 3.04 மணி வரை நீடிக்கும். இது உலகளாவிய கணக்காகும்.இந்த முறை இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்த சூரிய கிரகணம் ஆனது தெரியக்கூடும்.

தமிழ்நாட்டில் சென்னையில் சூரிய கிரகண நேரம்?

சென்னையில் இந்த கிரகணம் ஆனது 34 சதவீதம் வரை தெரியக்கூடும்.10.22 மணிக்கு தொடங்கி 11.58மணியளவில் உச்சம் பெற்று 1.41 வரை நீடிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

இந்த சூரிய கிரகண நேரத்தின் போது செய்யக்கூடாதவை?

பிரயாணம் செய்வது கூடாது

கிரகணத்தின் போது உணவு உண்ணுவது தவிர்க்க வேண்டும் இது அஜீரண கோளாறுகளை ஏற்படுத்தும்.

கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கக்கூடாது.

கிரணகன நேரத்தில் தூங்கக் கூடாது.

கர்ப்பிணி பெண்கள் கிரகண நேரத்தின் போது வெளியே வரக்கூடாது.

கிரகணத்தின் போது செய்யக் கூடியவைகள்?

கிரகண நேரத்தின்போது வழிபாடுகள் செய்தால் நல்ல பலன்களை தரும்.

கிரகண நேரத்தில் கோவில்கள் எல்லாம் மூடப்பட்டிருக்கும் எவ்வாறு வழிபாடு செய்வது என்று கேட்பவர்களுக்கு :

கிரகண நேரத்தின் போது தெய்வங்கள் அதிக ஆற்றலைப் பெற்று அசுர சக்திகளை அழிப்பதற்கு உச்சநிலையில் இருக்கும் இந்த நிலையை மனிதர்கள் பார்க்க கூடாது என்பதற்காக தான் கோவில்களின் கதவுகள் மூடப்பட்டு இருக்கும் ஆனால் இந்த நேரத்தில் நம் பிராத்தனை செய்யும்பொழுது நாம் பிராத்தனை செய்த அனைத்தும் பலிக்கும் என்று முன்னோர்கள் கூறுகின்றனர்..

எவ்வாறு வழிபாடு செய்வது?

சில குருமார்கள் உயிரை கேட்டாலும் கொடுப்பேன் ஆனால் நான் கற்ற மந்திரத்தை பிறருக்கு சொல்ல மாட்டேன் என்று சில மந்திரங்களை வைத்திருப்பர் அந்த மந்திரங்களை அவர்களின் இறுதி காலத்தின் போது தனது சிஷ்யர்களுக்கு கற்றுக் கொடுத்து விட்டு செல்ல வேண்டும் என்பது குருக்களின் நியதி.

அப்படி கற்றுத்தருவதற்கு தேர்ந்தெடுக்கும் நேரம் இந்த கிரகணம் நேரமாகும்.தண்ணீரில் நின்று தான், கற்ற மந்திரத்தை தனது சிஷ்யனுக்கு கற்றுக் கொடுக்கும் நேரம்.

இவ்வளவு பெருமைக்குரிய இந்த கிரகண நேரத்தில் நாம் ஏதாவது ஒரு மந்திரங்களை சொல்லி மனதுக்குள்ளேயே ஒரு நிலை தன்மையோடு தெய்வத்தை வழிபட்டு வருமாயின் நாம் நினைத்த அத்தனை காரியங்களும் வெற்றி பெறும் என்று ஆன்மிக ரீதியாக கூறப்படுகிறது.

முக்கியமாக கர்ப்பிணி பெண்கள் இவ்வாறு வழிபாடு செய்து வந்தால் பிறக்க போகும் குழந்தை நல்ல முறையில் பிறக்கும் என்பது முன்னோர்களின் வாக்கு.

கிரகணம் முடிந்த பின் குளிக்க வேண்டும்.நம் குளிக்கும் தண்ணீரில் சிறிதளவு கல் உப்பை சேர்த்து அந்த தண்ணீரில் குளிக்க வேண்டும்.ஏதாவது கதிர்வீச்சுகளை தண்ணீரானது உறிந்து வைத்திருந்தால் கல் உப்பை போடும் பொழுது அந்த உப்பானது அந்த கதிர்வீச்சை உட்கிரைத்துக் கொள்ளும்.

கிரகணம் முடியும் வரை நாம் உணவு உண்ண கூடாது.

கிரகணத்திற்கு பிறகு சமைத்து உண்ண வேண்டும் அல்லது கிரகணத்திற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்னர் உணவு உட்கொள்ளவேண்டும். திடஆதாரங்களை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

கிரகணத்துக்கு முன்னரே சமைத்து விட வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளவர்கள் நாம் சமையல் வைத்திருக்கும் பாத்திரத்தில் மேலும், தண்ணீர் வைத்திருக்கும் பாத்திரத்தின் மேல் பரப்பிலும் சிறிது தர்ப்பை புல்ளை போட்டு வைக்க வேண்டும்.இந்த தர்ப்பை புல்ளிருக்கு கதிர்வீச்சுகளை உட்கிரைகிக்கும் சக்தி உண்டு.

கர்ப்பிணி பெண்கள் சிறிதளவு தர்ப்பை புல்லை கையில் வைத்துக் கொண்டிருப்பது நல்லது.

author avatar
Pavithra